சனி, 16 ஏப்ரல், 2016

பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள்!


மாணிக்கவாசகம்பள்ளி, வாக்காளர் விழிப்புணர்வு04 :manikkavasakarpalli_therthalvizhippunarvu04

பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள்

வட்டாட்சியர் பேச்சு

தேவகோட்டை: – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 100  விழுக்காடு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு வண்ணக்கோலப் போட்டி நடை பெற்றது.
  விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சேது நம்பு, வருவாய் ஆய்வாளர் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேசுவரி தலைமை தாங்கிப் பேசுகையில், நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடமும், உங்கள் வீட்டருகே உள்ள அனைவரிடமும் சொல்லி  வாக்களிக்கச்  செய்யுங்கள். வாக்களிக்க நீண்ட நேரம் ஆகும் என  அஞ்ச வேண்டா. இப்போது தேர்தல்ஆணையம் புதிய நடைமுறை கொண்டுவந்துள்ளது. 1950 என்ற எண்ணில்  ‘கியூ /Q’ என்றஎழுத்தையும், வாக்குச் சாவடி எண்ணையும் தட்டச்சிட்டு உங்கள் அலைபேசி வழியாகக் குறுஞ்செய்தி அனுப்பினால் உங்கள் வாக்குச் சாவடியில் எத்துனையாவது ஆளாக நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் என்பதைச் சொல்லும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நீங்கள் அனைவருக்கும் சென்று பகிர்ந்துகொள்ளுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேர்தல் ஆணையமே வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை அழைத்துச் சென்று வாக்களிபதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இலவசங்கள் எதையும் வாங்காமல் அனைவரும் வாக்களிக்க நீங்கள் உங்கள் பெற்றோரிடம் வலியுறுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
  வாக்காளர் உறுதி மொழி அனைவராலும் சொல்லபட்டது. 100  விழுக்காடு வாக்களிப்பது, மே 16 வாக்களிக்கும்  நாள், வாக்களிப்பது நமது கடமை என்பன போன்ற வாக்காளர் விழிப்புணர்வு  முழக்கங்களுடன் பெற்றோர்கள் சத்யா,பெரிய நாச்சி ,சூரியா மாணவிகள் தனம், சௌமியா, சுருதி  ஆகியோர்  வண்ணக்கோலங்கள் வரைந்தனர். கோலங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில் வாக்களிப்பதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நாடகம், கும்மிப் பாட்டு, ஆங்கில உரை, தமிழ் உரை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வருவாய் உதவியாளர்  இர‌மேசு, ஊர் நிருவாக உதவியாளர் சந்திர சேகர், பெற்றோர்கள்  முதலான பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஆசிரியர்  சிரீதர் நன்றி கூறினார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

jeyamchok@gmail.com
www.kalviyeselvam.bl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக