தலைப்பு-பாலுமகேந்திரா விருது2016 : thalaippu_balumahenthira_kurimpadavirudhu2016

பாலுமகேந்திரா விருது 2016 – (குறும்படங்களுக்கு மட்டும்)

நண்பர்களே இயக்குநர் பாலுமகேந்திரா  நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது  நினைவுநாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்கத் தமிழ்ப்படநிலையம்(ஃச்டுடியோ) ஏற்பாடு செய்திருக்கிறது.

விருதுத் தொகை:

உரூபாய் 25000/-

  தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும்,  பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
  கலந்துகொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும்.
விதிமுறைகள்:
 * பாலுமகேந்திரா விருதுக்குக் குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் உரூபாய் 250/-  படச்சுருள் / PADACHURUL என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க  வரைவோலை(DD) யாகவோ, காசோலையாகவோ கீழ் வரும் முகவரிக்குப் படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும்.
* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.
* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் எண்மக் காணொளிவட்டை (டி.வி.டி.) அல்லது குறுவட்டை(வி.சி.டி.)யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
* இயக்குநர், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.
* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis),  முதன்மைக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos), இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
* குறும்படங்கள் 01.01.2011 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.
* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள்   ஏற்கப்படா.
* ஆவணப்படங்கள் (Documentary Films),  அசைவூட்டப்(அனிமேசன்) படங்கள் (Animation Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* பரிசுகள் பாலுமகேந்திரா  நாளான மே 19 அன்று (மே 19 வேலை நாளாக இருந்தால், அதற்கடுத்து வரும் வார இறுதிநாளில் வழங்கப்படும்)
* விருதுக்குக் குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : மே 09, 2016
* குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விதை, 1,  சுருதி  அடுக்ககம்,

காந்தி நகர், முதல் குறுக்குத் தெரு,

அடையாறு, சென்னை 600020.

பேசா மொழி <pesaamoli@gmail.com>
 தகவல் : முதுவை