குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!
சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும்.
திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த குழித்தலை
என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில்,
பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக்
குழித்தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர்.
இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம்,
பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம்
சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.
– ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை):
தமிழகம் ஊரும் பேரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக