சென்னை, செப்.15- பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி புரட்சித்தமிழுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது.
தொழிற்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவர்களால் தொடங்கப் பட்டது ஏபிகே-ஏஒடிஎஸ் தோசோகாய் தமிழ்நாடு மய்யம். சென்னை அமைந்த கரையில் உள்ள இந்த மய்யம் ஹியோஷி என்னும் ஜப்பான் நாட்டு நிறுவனத் துடன் இணைந்து ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி களை சென்னையில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளின் பரிசளிப்பு விழா
சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சென்னையில் உள்ள ஜப்பான்
தூதரகத்தின் அதிகாரி மசோனரி நகோனா கலந்து கொண்டு வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசு களை வழங்கினார்.
அரசுப்பள்ளிக்கூட மாணவர்களுக் கான தமிழ்
பேச்சுப்போட்டியில் சென் னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2
மாணவி ஆர். புரட்சித் தமிழ் (படம்) முதல் பரிசை பெற்றுள் ளார். இந்த
மாணவிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ஆம்தேதி ஜப்பான் நாட்டுக்கு 2 வாரம்
சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. சுற்றுலாவுக்கான செலவுகள் அனைத்
தையும் ஜப் பானைச் சேர்ந்த ஹியோசி என்ற சுற்றுச் சூழல் ஈடுபாடு கொண்ட
நிறுவனம் ஏற்கிறது. மேலும் மெட்ரிக் பள்ளி மாணவர் பிரிவில், செயிண்ட்மேரீஸ்
பள்ளியின் பிளஸ்-2 மாணவர் எச்.லோகேஸ், கல் லூரி மாணவர் பிரிவில், சென்னை
மிஸ் ரிமல் நவஜி முனோத் ஜெயின் பொறி யியல் கல்லூரி மாணவர்
சி.சாய்பிரசாந்த், ஏபிகே-ஏஒடிஎஸ் தமிழ்நாடு மய்யத்தை சேர்ந்த மாணவி மோனிகா
ஆகிய 4 பேருக்கும், ஜப்பான் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது
- விடுதலை