ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா







கரந்தை செயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார்விழா அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிதம்பரம் ஞானப்பிரகாசர்தெரு சேக்கிழார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேக்கிழார் அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனரின் புதல்விகள் சென்னை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன், யுஎஸ்ஏ டாக்டர் கிருஷ்ணகாந்தி, புதல்வர் வி.எஸ்.மணி ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். பரிசு பெற்ற மாணவர்கள்: எஸ்.சண்முகப்பிரியா (ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி), கே.ஹாலிக்ரகுமான் (ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி), என்.நிவேதா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி), என்.சாகித்தியா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி).
விழாவில் டாக்டர் பழநிசுவாமிநாதன், ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி அறங்காவலர் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், தலைமை ஆசிரியர் வி.சுப்பிரமணியன், தமிழாசிரியர்கள் மு.கல்யாணராமன், பி.தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக