கிறித்துவச் சமயத்திற்கு மாறிக் கொண்டு ஆனால், முறைப்படி தெரிவிக்காமல் இந்துக்களுக்குரிய சலுகைகளைப் பெறுபவர்கள், பட்டியல் சாதியில் சேர்க்கப்பட்டால், இனி, வெளிப்படையாகவே சமய மாற்றத்தை அறிவிப்பர். இதனால் சமயமாற்றம் பெருகும். பண்பாடு சீரழியும். நமக்குத் தேவை சமயச்சார்பற்ற நாடும், அனைத்துப் பிரிவினரும் சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து நன்மைகளையும் பெறுவதுமே! இறைநெறியாளர்களும் பகுத்தறிவுடன் திகழும் வகையில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். சாதி, சமயமற்றோர் பிரிவை உண்டாக்கி அவர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, சமயமாற்றத்தாருக்கு எவ்வகை முன்னுரிமையும் அளிக்கக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
ஆதி த் திராவிட க் கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி முதல்வர் கடிதம்
By
dn, சென்னை
First Published : 09 August 2013 10:26 AM IST
ஆதி திராவிட கிறிஸ்தவர்களை எஸ்.சி./எஸ்.டி.
பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு
கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆதி திராவிட கிறிஸ்தவர்களை
தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கடந்த
1995ஆம் ஆண்டே நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதேக் கோரிக்கையை
தான் தற்போதும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது எஸ்சி பிரிவில் இந்து, சிக்கிம், புத்த சமயத்தை சேர்ந்தவர்கள்
மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்
சேர்க்கப்படவில்லை. எனவே, ஆதி திராவிட கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர்
பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இது குறித்த மசோதா தற்போது நடந்து வரும் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே
நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஆதி திராவிட
கிறிஸ்தவர்கள், எஸ்.சி. பிரிவினருக்கு தமிழக அரசு அளிக்கும் பல்வேறு
நலத்திட்டங்களைப் பெற முடியும்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கருத்துகள்(6)
ஆதி திராவிடர்கள் தங்கள் ஜாதி வெளியே தெரிய கூடாது
என்பதற்காக கிருஸ்துவ மதத்தில் சேர்கிறார்கள். பதவி, படிப்பு இவைகளில் இட
ஒதிக்கீடு மற்றும் சலுகைகளை அனுபவிக்க மட்டும் தன் ஜாதியை பயன்
படுத்துகிறார்கள். உண்மையான இந்து தலித் இட ஒதிக்கிட்டு பயன் கிடைக்காமல்
போகும். மேலும் இது தலித்களை மதம் மாற்ற சில அந்நிய சக்திக்கு வசதியாக
போகும். மதம் மாறிய அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களையும் OC பட்டியலில்
சேர்க்கவேண்டும். SC/ST கோட்டாவை குறைத்து அதில் இருந்து எடுத்ததை OC
கோட்டாவில் சேர்க்கவேண்டும்.
பதிவுசெய்தவர்
ராசு படையாட்சி
08/09/2013 11:37
இதற்கான பதில்
முறையற்ற கருத்து
இந்து மதத்தை விட்டு மாறிய , மக்களுக்கு s/c பட்டியலில் சேர்பது தவறு ! தாத்தா கூட இந்த தவறை செய்யவில்லை , தன் ஆட்சியில் !
கிருத்துவ மதத்தில் தான் சாதி கிடையாதே! அவர்கள் இந்து
மதத்திற்குத் திரும்பித் தங்கள் சாதிகளைச் சொல்லிச் சலுகைகள் பெறட்டுமே!
இறைவழிபாடு மனம் தொடர்பானது தானே!
இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கு ஜாதி
கொடுமைகளும் , சலுகைகளும் மட்டும் காரணமில்லை.ஜாதி கொடுமைகள் மட்டும்தான்
காரணம் என்றால் இன்று இந்துவில் எந்த தாழ்த்தப்பட்டவர்களும்
இருக்கமாட்டார்கள். எப்படி ஒவ்வொரு மதமும் இந்தியாவில் பரவும் போது அந்த
மக்களால் தழுவப்பட்டதோ அது மாதிரிதான் கிறிஸ்தவ மதமும் ஏற்கப்பட்டது. ஆனால்
இந்துவிலிருந்து முஸ்லிம் மதமோ இல்லை மற்ற மற்ற மதத்திற்கு மாறும்போது
இந்துவிலிருந்த ஜாதியும், அடையாளமும் அழிந்துவிடுகிறது. கிறிஸ்தவ
மதத்திற்கு மாறும்போது இந்த ஜாதியும் அடையாளமும் அழிவதில்லை. கிறிஸ்தவ மதம்
உலகம் முழுவதும் தழுவப்பட்டாலும் அந்தந்த நாட்டின் காலாச்சரத்திற்கு
உட்பட்டே தழுவப்படுகிறது. இன்று வரை கிறிஸ்தவ மதத்தில் இருக்கும்
தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ பள்ளர் என்றும் கிறிஸ்தவ பறையர் என்றும்தான்
ஜாதி சான்றிதழ் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில், இவர்கள்
தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் அதனால்
பிற்படுத்தப்பட்டவர்கள் என்றல்லாம் யாரும் பார்ப்பதில்லை.
கூடவே கூடாது... ஆதிதிராவிடர்,தாழ்த்தப்பொர் பிரிவு இந்து
மதத்தில் உள்ள பிரிவினரே. இந்து மதமே வேண்டாம் என தூக்கி எறிந்து
ஓடியவர்கள் எப்படி இந்து மதத்தில் உள்ள ஒரு பிரிவாக தாழ்தப்பட்டோர்
பிரிவில் மட்டும் சலுகைக்காக மட்டும் பயனபடுத்திக்கொள்ள அனுமதிப்பது தவறு.
தாழ்த்தப்பட்டொர் என்பது இழிவு என்றுதான் மதம் மாறினார்கள். பிறகு சலுகை
என்றால் மட்டும் அந்த இந்து மதம் தேவைபடுகிறதோ?
iyaa கருணாநிதி கூட செய்யகூடாத காரியத்தை அம்மா செய்து இந்து மதத்தை அவமதித்து கொண்டிருக்கிறார்
பதிவுசெய்தவர்
viswanathanr
08/09/2013 14:03
இதற்கான பதில்
முறையற்ற கருத்து
+++++++++++++
தந்தை பெரியார் வந்தார் நம்ம பேருக்கு பின்னால் கவுண்டர், படையாச்சி,
நாடார், செட்டியார் தேவர், ரெட்டியார் உடையார் ன்னு இருந்த ஜாதி பேர
எல்லாம் எடுத்துட்டு அப்பா பேர போட வச்சார் அம்மா வந்தாங்க அம்மா பேரையும்
போடலாம்னு சொன்னாங்க. இத நான் இங்க என்கூட பணியில்ல இருக்குற பிற இந்திய
மாநிலவத்தர் கிட்ட எல்லாம் பெருமையா சொல்லுவேன் பட் எந்த பெரியார் வந்து
ஜாதியால் இன்னும் பிரிஞ்சு கிடக்குற நம்மை ஒன்னு சேர்பங்கன்னு தெரியலை.
என்னைக்கு நம்ம நாட்டுக்கு ஜாதி பேர பின்னாடி போடாத பிரதமரும் ஜனாதி
பதியும் கிடைக்கரன்களோ அன்னைக்கு ஜாதி ஒழியும்
+++++++++++++
வாசகர் கருத்து
(6)
kalaignar piriyan - Arivaalaiyam,யூ.எஸ்.ஏ
மறுமொழி :
பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரனார், 1929 இல் நடைபெற்ற முதல் தன்மதிப்பு மாநாடான செங்கல்பட்டு மாநாட்டில் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்களைத் துறக்க வேண்டும் எனத் தீர்மானம் கொணர்ந்தார்; தாமும் தம் பெயருக்குப்பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் சாதிப்பெயரைத் தூக்கி எறிவதாகவும் தெரிவித்தார். இத் தீர்மானத்தைத் தந்தை பெரியார் முன் மொழிந்தார். இதன் விளைவுதான் இன்று தமிழகத்தில் சாதியால் அழைக்கப்படுவோர் குறைந்துள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் சாதிப்பெயர்களால்தான் தலைவர்களே அழைக்கப்படுகிறார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் அறிமுகமாகும் பெண்கலைஞர்கள் சாதிப்பெயர்களுடன்உலா வருகின்றனர். இதற்கும் தடை விதிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/