இட்லியில் இமயம் தொட…: கின்னசு முயற்சியாக 100 அயிரைக்கா எடையில் ஓர் இட்லி
சென்னை : கொடுங்கையூரில்,http://www.dinamalar.com/news_detail.asp?id=777757 கின்னஸ் சாதனை முயற்சியாக, நாளை, 100 கிலோ எடையுள்ள ஒரே இட்லியை, இனியவன் என்பவர் செய்யவுள்ளார்.கொடுங்கையூர், எழில் நகரை சேர்ந்தவர் இனியவன்,42. இவர், கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனம் நடத்தி வருகிறார். இட்லி மட்டுமே செய்வது இவரது தொழில்.சென்னையில், செல்வந்தர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் வீட்டு கல்யாணம் மற்றும் கவர்னர் மாளிகையில் நடக்கும் முக்கிய விருந்துகளிலும் கூட, இவரது தயாரிப்பில் உருவான இட்லி, பந்தியில் வெண்ணிறமாக மின்னும்.இவர், ஏற்கனவே, 2009ல், மெரீனா கடற்கரையில், 50 கிலோவில் இரண்டு, 40 கிலோவில் ஒன்று என, 140 கிலோவில், மூன்று ராட்சத இட்லிகளை நவதானியம் கலந்து செய்து அசத்தியுள்ளார்.
இட்லி மட்டும்:
தற்போது, கின்னஸ் முயற்சியாக, நாளை, 100 கிலோவில் ஒரே இட்லி செய்து அசத்தவுள்ளார். அதற்கான பயிற்சியில், கடந்த ஒரு மாதமாக, ஈடுபட்டு வந்த இனியவன், நேற்று, ஏழாவது முறையாக செய்து முடித்த, 100 கிலோ இட்லி வெற்றிகரமாக வந்ததை, பார்வையாளர்களிடம் காட்டினார்.
இட்லியில் இமயம் தொட நினைத்தது குறித்து, இனியவன் கூறியதாவது:கடந்த,
1997க்கு முன், கோவையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த போது, இட்லி
செய்து விற்கும் சந்திரா என்ற பெண்மணியை, ஆட்டோவில் ஏற்றிச் செல்வேன்.
அவர் செய்த இட்லியில், நாமும் ஏதாவது செய்ய நினைத்தேன். 1997ல், சென்னை
வந்தேன். இட்லி மட்டுமே செய்ய கற்றுக்கொண்டேன்.
ஆரம்பத்தில், போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் இட்லி செய்யும் தொழிலில் ஈடுபட்டேன். அதன்பின், நானே தனியாக இட்லி நிறுவனம் ஒன்றை துவங்கினேன்.ஆனால், பலர், இட்லியை ஒரே விதமாகவே செய்து வந்தனர்.அதுமட்டுமில்லாது, எளிதில் ஜீரணமாகும், ஊட்டச்சத்து இல்லாத உணவாக இட்லியை குறிப்பிட்டனர்.அதனால், இட்லியில் புதுமைப்படைக்க விரும்பினேன். வட்டமாக மட்டுமே என்றில்லாமல், சதுரமாகவும் தட்டையாகவும், பழம், காய்கறி, பாதாம், கோதுமை, ராகி, கம்பு, சாக்லெட், கீரை, சோளம் மற்றும் கைக்குத்தல் அரிசி என, இட்லியை, 1,000 வகைகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் செய்ய முடியும் என நிரூபித்தேன்.அதை, சிறு மாதிரிகளுடன், பல கல்யாண மண்டபம், பெரிய ஓட்டல்கள் என, பலருக்கு கடிதம் எழுதினேன். அதன் மூலம், எனக்கு இட்லி மட்டுமே செய்யக்கூடிய ஆர்டர்கள் கிடைத்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக