தின இதழ் Home / சிறப்பு பகுதிகள் /
இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் - பொம்மை அரசை உருவாக்க சூழ்ச்சி
சென்னை, ஆக. 7
இலங்கை வடக்கு மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பொம்மை அரசை உருவாக்க சூழ்ச்சி நடப்பதாக கருணாநிதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தி.மு.க.
தலைவர் கருணாநிதி அறிக்கை:கடந்த மாதம் 16ந் தேதி சென்னை அண்ணா
அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் கூட்டம் என்னுடைய
தலைமையில் நடைபெற்ற போது நிறைவேற்றப்பட்ட, இலங்கை அரசமைப்புச் சட்டத்தின்
13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில்
நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பது
உள்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும்,
இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக
தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், ‘டெசோ’ இயக்கத்தின் சார்பில் நாளை
(வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தமிழகம் முழுதும் உள்ள மாவட்டத்
தலைநகரங்களில், ‘தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்’ நடத்துவதென டெசோ
இயக்கத்தின் சார்பில் முடிவெடுத்து அறிவித்ததற்கிணங்க, நாளைய தினம்
சென்னையில் என்னுடைய தலைமையிலும், மதுரையில் கி. வீரமணி தலைமையிலும்
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையே இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ள வடக்கு,
வடமேற்கு, மத்திய மாகாணக் கவுன்சில்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில்
போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 2ம் தேதியோடு முடிவடைந்து
விட்டது.அதனையொட்டி பேசிய இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்னே, ‘மாகாணக்
கவுன்சில்களுக்கான காவல் துறை அதிகாரம் மற்றும் நிலம் சம்பந்தமான உரிமைகள்
பறிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து இவருடைய பேச்சின்
மூலம் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்து, வடக்கு
மாகாணத்தில் உரிமைகள் ஏதும் தராத ‘பொம்மை’ அரசு ஒன்றை உருவாக்க எண்ணிடும்
சூழ்ச்சிதான் என்று தெரிகிறது.இதனை எதிர்க்கும் வகையிலேதான் நாளை நம்முடைய
ஆர்ப்பாட்டம் அமையவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக ஆக்கித்
தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது.’’இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக