தமிழ்வழிக்
கல்விக் கூட்டியக்கப் பேரணி 1000க்கு மேற்பட்டோர் கைது
தமிழக அரசு தமிழகம் எங்கும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவேறினால் பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை மெல்ல மெல்ல வெளியேற்றி விடும் நிலை ஏற்படும். இந்த ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விண்ணப்பம் அளிக்க சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கிப் பேரணி இன்று (07.08.2013) காலை 10.00 க்கு நடைபெற்றது.
இப்பேரணியை தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருகிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபா அவர்கள் துவக்கிவைத்து பேசினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்திய, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் கா.பரந்தாமன், விடுதலைத் தமிழ்ப் புலிகள்த் தலைவர் தோழர் குடந்தை அரசன், புதுக்கோட்டை பாவாணன், தமிழர் நீதிக் கட்சி சு.பா.இளவரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைபாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் தோழர் அருண்சோரி, உலகத் தமிழர் கழக நெறியாளர் பேரா.ம.இலெ.தங்கப்பா, தலைநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த. சுந்தரராசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பானார், மக்கள் கல்வி இயக்கம் பேரா.பிரபா கல்விமணி, மக்கள் நல்வாழ்வு இயக்கம் தோழர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் மையக்குழு சிவ.காளிதாசன், சேவ் தமிழ் இயக்கம் செந்தில், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன், தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான், தாளாண்மை உழவர் இயக்கம் பொறி. கோ.திருநாவுக்கரசு, தமிழர் குடியரசு முன்னணி வழக். செயப்பிரகாசநாராயணன், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் தோழர் மா.சேகர், தமிழ் மீட்புக் கூட்டியக்கம் அ.சி.சின்னப்பத்தமிழர், தமிழ்க் களம் புலவர் அரங்கநாடன், மக்கள் மாநாட்டுத் கட்சித் தலைவர் வழக்.க.சக்திவேல், செந்தமிழர் இயக்கம் ந.மு.தமிழ்மணி, திருவள்ளுவர் அறக்கட்டளை மா.செ.தமிழ்மணி, அன்றில் பா.இறையெழிலன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் 1000க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டு கைதாயினர்.
தோழர் பெ.மணியரசன் தலைமையில் போராட்ட குழுவினர் தமிழக முதல்வரின்
தனிச் செயலாளரின் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை நேரில் சென்று கையளித்தனர்.
பல்வேறு கட்சித் தலைவர்களும் தோழர்களும் 1000த்திற்கு மேற்பட்டோர்
கைதாகி அண்ணா கலை அரங்கத்தில் சிறைபடுத்தப் பட்டனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை,
தோழர் குழ.பால்ராசு, தோழர் பழ.இராசேந்திரன், தோழர் அ.ஆனந்தன், தோழர் உதயன், தோழர் க.முருகன்.
பொதுக் குழு உறுப்பினர்கள் தோழர் கவித்துவன், தோழர் தமிழ்மணி, தோழர் பழ.நல்.ஆறுமுகம்,
தோழர் இராசு, தோழர் இரா.சு.முணியாண்டி, தோழர்ஆரோக்கியசாமி, தோழர் விடுதலைச் சுடர்,
தோழர் கு.சிவபிரகாசம். தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன். மகளிர் ஆயம் தோழர்கள் மீனா, மேரி,
இலட்சுமி, செராபீனா உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துக் கொண்டு கைதாயினர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
007.JPG 6991K View Share Download |
017.JPG 6452K View Share Download |
080.JPG 407K View Share Download |
083.JPG 6212K View Share Download |
21642_692833877398132_1155058617_n.jpg 102K View Share Download |
1005331_692835210731332_411168865_n.jpg 96K View Share Download |
P1100816.JPG 283K View Share Download |
P1100827.JPG 216K View Share Download |
P1100858.JPG 225K View Share Download |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக