வியாழன், 8 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது; செயலலிதா

Description: newsதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையை நிச்சயம் ஒரு நட்பு நாடாக ஏற்க முடியாது என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன்.

இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலையிட்டு தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன்.

ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி ராமேசுவரத்தில் மீன் பிடிக்க சென்ற 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி செயல்பட்டு சட்ட விரோதமாக கடத்தி சென்றுள்ளனர். இது கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ள 3–வது கடத்தல் சம்பவமாகும்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது சிங்கள கடற்படையினர் அவர்களை சட்ட விரோதமாக கடத்தி சென்று விட்டனர். தலைமன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 4.8.2013 வரை காவலில் வைக்கப்பட்டனர்.

அப்பாவி தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், சிறை வைப்பு ஆகியவை குறித்து நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி தெரிவித்து உள்ள போதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் உள்ளது.

மத்திய அரசின் இந்த உறுதியற்ற நடவடிக்கையால்தான் சிங்கள இராணுவம் துணிச்சல் கொண்டு தொடர்ந்து அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கடலோர மீனவ சமுதாயத்தினரிடம் பதட்டத்தையும், போராட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் மட்டுமின்றி மீனவர்கள் போர்வையில் வரும் சிங்கள வெறியாளர்களாலும் தாக்கப்படுகிறார்கள்.

இதற்கு மத்திய அரசு தூதர்கள் அளவில் தலையிட்டு உறுதியான பதில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள இயலாது என்று தூதர் மூலம் கடுமையாக கண்டிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=710852221007133273#sthash.00Bxr7hX.dpuf

இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது; ஜெயலலிதா
news
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையை நிச்சயம் ஒரு நட்பு நாடாக ஏற்க முடியாது என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக