புதன், 7 ஆகஸ்ட், 2013

கைவிலங்குடன் பெட்டிக்குள் அடைத்து 14500 அடி உயரத்தில் இருந்து வீசியும் உயிர் பிழைத்த மாய வித்தை வீரர்

கைவிலங்குடன் பெட்டிக்குள் அடைத்து 14500 அடி உயரத்தில் இருந்து வீசியும் உயிர் பிழைத்த  மாய வித்தை வீரர்
 
கைவிலங்குடன் பெட்டிக்குள் அடைத்து 14500 அடி உயரத்தில் இருந்து வீசியும் உயிர் பிழைத்த சாகச வீரர்
நியூயார்க்கு, ஆக. 7-

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், ஷெபோய்கன் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி மார்டின்(47). எப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் அடைத்து வைத்தாலும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதில் இருந்து 'எஸ்கேப்' ஆகிவிடும் கலையில் கைகோர்த்த சாகசக்காரரான இவரை அமெரிக்க மக்கள் 'டேர் டெவில்' என்று அன்புடன் குறிப்பிடுகின்றனர்.

25 ஆண்டுகளாக இந்த சாகசத்தில் பல சாதனைகளை படைத்துள்ள இவர் நேற்று மேலும் ஓர் புதிய சாதனையை படைத்துள்ளார். கையில் விலங்கிட்டு ஓர் பெரிய பெட்டிக்குள் இவரது உடலை இணைத்து கட்டி, பெட்டியையும் பூட்டி 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து விமானம் மூலம் இவர் கீழே வீசப்பட்டார்.

பெட்டியுடன் ஒரு பாராசூட் இணைக்கப்பட்டிருந்தாலும் பெட்டி விழும் வேகத்தை பாராசூட்டால் கட்டுப்படுத்த முடியவில்லை. விமானத்தில் இருந்த வீசப்பட்ட பெட்டியை செங்குத்தாக நிலைநிறுத்த மேலும் 2 'ஸ்கை டைவிங்' வீரர்கள் கீழே குதித்தனர்.

மணிக்கு 193 கிலோ மீட்டர் வேகத்தில் அந்தோனி மார்ட்டின் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி பூமியை நோக்கி பாய்ந்தது.

இந்த பயணத்துக்கு இடையில் 40 வினாடிகளில் கை விலங்கை உடைத்துக் கொண்டு, பெட்டியின் பூட்டையும் உடைத்து, பெட்டியை திறந்து, பாராசூட்டை பிடித்தபடி பத்திரமாக தரையிறங்கி அனைவரையும் அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக