மழைக்காலத்தில் வீட்டு ப் பேணுகை!
மழைக்கால, "நசநச'ப்பில் இருந்து, எப்படியெல்லாம் வீட்டை பராமரிக்க வேண்டும் என்பதை கூறும், கே.சேகர்: நான், "நீட் அண்ட் கிளீன்' ஹவுஸ் கீப்பிங் நிறுவனத்தை, நடத்தி வருகிறேன். தற்போது மழைக்காலம் என்பதால், வீட்டின் மொட்டை மாடியை, சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில், மழை நீரானது குப்பையோடு அடித்து செல்லப்பட்டு, தண்ணீர் வடிவதற்கான குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாடியிலேயே நீர் தேங்குவது, பழைய வீடுகளுக்கு, பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.வீட்டில், "மழைநீர் சேகரிப்பு திட்டம்' செயல்படுத்தினால், நிலத்தின் நீர்மட்டம் உயர்ந்து, கோடையில் வீட்டின் கிணறுகள் வற்றுவதை தடுக்கும். மழைச்சாரல் காரணமாக, வீட்டின் கதவு
கள் நனைந்து, சற்று உப்பிக் கொள்ளும். இதனால், கதவை சரியாக மூடி, திறப்பதில் சிரமம் ஏற்படும். இதை தவிர்க்க, தேக்கு போன்ற நல்ல மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
மின் சாதனங்களை பயன்படுத்தும் போது ஈரக் கையுடன், "ஸ்விட்ச்' களை கையாள கூடாது.
சமையலறையில் பயன்படுத்தப்படும், மிக்சி போன்ற சாதனங்கள், எப்போதும், "ஆன்' நிலையிலேயே இருந்தால், விபத்தை ஏற்படுத்தும்.
உபயோகம் முடிந்ததும், "பிளக் பாயின்டில்' இருந்து, "பிளக்'குகளை எடுத்து விடுவது நல்லது.கட்டில் மற்றும் சோபாக்களில் அமர்ந்து, சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், மழைக் காலத்தில், எறும்புகளின் புழக்கம், அதிகமாக இருக்கும். எறும்புகள் கடித்து, குழந்தைகளின் தூக்கம் தடைபட வாய்ப்புள்ளது. மழைக் காலத்தில், நோய் தொற்று அதிகம் என்பதால், வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்.குறிப்பாக, வீட்டில் நோயாளிகள் இருந்தால், அவர்கள் கழிவறையை பயன்படுத்திய பின், "பாத்ரூம் கிளீனர்' அல்லது, "பினாயில்' மூலம் சுத்தப்படுத்துவது நல்லது. மழை நீரை தேங்க விடாமல் தவிர்த்தால், கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். பழைய பிளாஸ்டிக் மற்றும் டயர்களை, அவ்வப்போது அப்புறப்படுத்தினால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அதில் தங்கி, பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக