திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மருத்துவ இடம் கிடைத்தும் தவிக்கும் மாணவன்


Home / சிறப்பு பகுதிகள் / மருத்துவ சீட் கிடைத்தும் கட்டணம் இல்லாமல் தவிக்கும் சேலம் மாணவன்
மருத்துவ சீட் கிடைத்தும் கட்டணம் இல்லாமல் தவிக்கும் சேலம் மாணவன்

மருத்துவ  இடம் கிடைத்தும் கட்டணம் இல்லாமல் தவிக்கும் சேலம் மாணவன்

சேலம், ஆக. 19
மருத்துவ படிப்பிற்கான சீட்டு கிடைத்தும் கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் திண்டாடுகிறான் சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவன்.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ள வடுகப்பட்டி, தட்டாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நெசவுக்கூலித் தொழிலாளி வெங்கடாசலம். இவரது மனைவி பூங்கொடி. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு வினோத்குமார்(17), இளவரசன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
வினோத்குமார் அப்பகுதியில் உள்ள வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தார். 450 மதிப்பெண் பெற்ற அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பில் இலவசமாக படிக்க வைத்தது. வினோத்குமார் 12ம் வகுப்பில் 1107 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது கட்டாப் மார்க் 188.5. மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக படித்த இவருக்கு கவுன்சிலிங்கில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்துவிட்டது.
தாயும், தந்தையும் கூலித்தொழில் செய்வதால் மருத்துவம் படிப்புக்கு கட்டணம் செலுத்தும் அளவுக்கு பணவசதி இல்லாமல் போனது. அதிலும் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தாலும் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், ஹாஸ்டல், உணவு என பல்வேறு கட்டணங்கள் என சுமார் ரூ.6 லட்சம் வரை கேட்டுள்ளனர்.கல்விக்கட்டணமே கட்டமுடியாத நிலையில் உள்ள தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளார்.இரக்க மனம் உள்ளவர்கள் இந்த மாணவனின் கல்விக்கு உதவலாம். உதவுவார்கள் என்று நம்புவோம்.
- தினஇதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக