இந்தியாவின் ஏற்பாட்டில் இலங்கையில் பொதுநல மாநாடு நடக்க இருக்கிறது: வைகோ
மதிமுக நடத்தும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள்
விழாவிற்காக வருதுநகர் மாநாட்டிற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று
வருகின்றன. இன்று காலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அதனை
பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் ஏற்பாட்டில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்க
இருக்கிறது. இனக்கொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை,
நடத்தக்கூடாது. இந்த மாநாடு நடத்துவதன் மூலம் கூட்டுக்குற்றவாளி இந்தியா
தப்பித்துக்கொள்ளலாம் என நினைக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நடக்கும்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று, காங்கிரஸ்
தலைமையிலான அமைச்சரவையில் இருந்த கூட்டுக் குற்றவாளிகள் கூறி வருகிறார்கள்.
அது ஏமாற்று நாடகம்.
விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படம்
ஆகஸ்ட் 23 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத்
திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.. தமிழ்நாட்டில் திரையிட
தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு
அனுமதிக்கக் கூடாது; திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என
வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்,
திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன். இதற்கு மேலும் இப்படம்
தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை
நடத்துவோம்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், இந்திய ரூபாயின் மதிப்பு
வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தியா அரசும் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடை மத்திய
அரசு அனுமதித்திருக்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல் விலை, டீசல்
விலை உள்ளிட்ட அத்திவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்திக்கொண்டே போகும்
காங்கிரஸ் தலைமையிலான அரசு, இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. வருகின்ற
நாடாளுமன்றத்தில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்
என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக