வியாழன், 4 ஜூலை, 2013

கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்த தக்ளசு எங்கெல்பார்ட்டு மரணம்

கணினி ச் சுட்டியை க் கண்டுபிடித்த தக்ளசு எங்கெல்பார்ட்டு மரணம்

கணினியின் பயன்பாட்டை எளிதாகும் மவுஸைக் கண்டுபித்த டக்ளஸ் எங்கெல்பார்ட் தனது 88வது வயதில் சிறுநீரக கோளாறால் மரணம் அடைந்தார்.
கலிபோர்னியாவில் வசித்து வந்த எங்கெல்பார்ட், ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மேலும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வியாழக்கிழமை காலமானதாக அவரது மகள் டயானா எங்கெல்பார்ட் தெரிவித்துள்ளார்.
இணையதள கண்டுபிடிப்பிற்கும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக