வாழும் கடவுள்கள்-இன்று மருத்துவர்கள் நாள்
உடலில் குறை என்றால் நாம் உடனடியாக ச் செல்வது டாக்டரிடம்.
அவர்களது பணி மதிப்பு மிக்கது. எந்த நேரத்தில் சென்றாலும் டாக்டர்கள்,
மருத்துவ சேவை அளிக்கின்றனர். இவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும்
விதமாகவும், அவர்களது அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும்
ஜூலை 1ம் தேதி, தேசிய டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில்
பி.சி.ராய் பிறந்த தினம், தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பி.சி.ராய்:
மேற்கு
வங்கத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர
போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர்
பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில். மருத்துவம், அரசியல்,
நிர்வாகம், கல்வி என பல துறைகளில் பிறருக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார்.
1882ல் பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார். பாட்னா கல்லூரியில் பி.ஏ.,
முடித்துவிட்டு கோல்கட்டாவிலும், பிரிட்டனிலும் மருத்துவப் படிப்பை
மேற்கொண்டார். இந்தியாவுக்கு திரும்பியதும் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில்
ஆசிரியராக பணியாற்றினார். "சுதந்திரம் எனும் கனவு நிறைவேற, இந்தியர்களுக்கு
வலிமையான உடலும், மனமும் தேவை' என்பது பி.சி.ராயின் நம்பிக்கை. இதனால்
ஏழைகளுக்காக, பல ஆஸ்பத்திரிகளை தொடங்கினார். 1948ல் மேற்கு வங்க முதல்வர்
ஆனார். இவருக்கு 1961ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது
நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற
துறைகளில் சாதனை செய்பவர்களுக்கு, "பி.சி.ராய் தேசிய விருது'
வழங்கப்படுகிறது.
எப்போது விடிவு:
டாக்டர்கள்
தினம் கொண்டாடும் வேளையில், இந்தியாவில் இன்னமும் பல கிராமங்கள், ஆரம்ப
சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. முதலுதவி
சிகிச்சை பெறுவதற்கு கூட, அப்பகுதி மக்கள் 10 கி.மீட்டருக்கு மேல் நடந்து
செல்ல வேண்டும். எனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட
இடைவெளியில், குறைந்தது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
டாக்டர்களும் கிராமப்புறங்களில் பணி செய்ய முன் வரவேண்டும். நோயாளிகள்,
டாக்டர்கள் விகிதம் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. மாணவர்கள் அதிகளவில்
மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்க வசதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனத்தை விட்டு அகலாத மருத்தவ அனுபவங்கள்:
"எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று கையெடுத்து கும்பிட்டு, கண்ணீர் விட்டு கதறுவோம். "எங்க குடும்பத்தையே காப்பாத்திட்டீங்க' என்று ஆனந்தக் கண்ணீருடன் காலில் விழுவோம்.இவை எல்லாம் யாரிடம் சொல்வோம்? கடவுளின் பிரதிநிதிகளாக நாம் மதிக்கும் டாக்டர்களிடம் தான்!கடவுளிடமும், உயிர் காக்கும் டாக்டர்களிடமும் சோகத்தையும், சந்தோஷத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொள்வோம். அழகை ஆராதிப்பது மனித இயல்பு. அந்த அழகைத் தாண்டி உடலில் ஏற்படும் மாற்றங்களை, நோயின் கொடுமைகளை அலசி ஆராய்வது, தெய்வ இயல்பு. அசுத்தம், அருவருப்பு பாராமல், அலட்சியம் செய்யாமல், அன்பு பாராட்டி அரவணைக்கும் மனித தெய்வங்கள், மருத்துவம் படித்த டாக்டர்களே.விபத்தில் அடிபடும் விலைமதிப்பில்லா உயிர்களுக்காக... திடீர் விபரீதத்தை சந்திக்கும் நோயாளிகளுக்காக... தங்களது 24 மணிநேரத்தையும் விழிப்போடு, செலவிடத் தயாராக இருப்பவர்கள் இவர்கள்.ஒவ்வொரு நோயாளியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான், டாக்டர்களின் பிரார்த்தனை. பிரார்த்தனையைத் தாண்டி, தங்களை பிரமிக்க வைத்த மருத்துவ அனுபவங்களை, "மருத்துவர்கள் தினமான' இன்று, நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்,
எஸ்.லலிதா, மகப்பேறு நிபுணர், மதுரை:மற்ற
துறைகளில் நோயாளி ஒருவர் தான், அவருக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்க
வேண்டும். மகப்பேறு துறையில் ஓருயிரை, ஈருயிராக நல்லபடியாக காப்பாற்ற
வேண்டும். என் அனுபவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம்
பார்த்துள்ளேன். சிலமாதங்களுக்கு முன், வெளியூரைச் சேர்ந்த கர்ப்பிணியை
என்னிடம் அழைத்து வந்தனர். அந்தப்பெண் ஐந்துமாத கர்ப்பமாக இருந்தபோது,
"ஸ்கேன்' பார்த்ததில், குழந்தையுடன் பெரிய கட்டியும் இருந்ததை,
கண்டுபிடித்தனர். முதல் பிரசவம் என்பதால், அங்கிருந்து என்னிடம் அனுப்பி
வைத்தனர். அந்தபெண்ணின் ஒரு சினைப்பையில் மிகப்பெரிய கட்டி இருந்தது. அந்த
கட்டி திரும்புவதற்கு வாய்ப்பு அதிகம் இருந்தது. அப்படித் திரும்பினால்
கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கரு கலைந்து விடும். ஐந்தாம்
மாதத்தில் இருந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை, மருத்துவமனைக்கு
வரவழைத்தேன். அப்பெண்ணுக்கு வயிறு மிகப் பெரியதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக
கட்டி திரும்பவில்லை. ஆனால் சுகப்பிரசவத்தின் போது பிரச்னை ஏற்படலாம்
என்பதால், முன்கூட்டியே தேதி நிச்சயித்து அறுவை சிகிச்சை செய்து, பெண்
குழந்தையை வெளியே எடுத்தோம். அதன்பின், சினைப்பையுடன் சேர்த்து கட்டியை
அகற்றினோம். குழந்தையின் எடை 2.800 கிலோ தான். ஆனால் கட்டி 3 கிலோ
எடையுள்ளதாக இருந்தது. ஒரு சினைப்பையை அகற்றினாலும், மற்றொரு சினைப்பையின்
மூலம் அப்பெண் குழந்தை பெற முடியும். குழந்தையை வெளியே எடுத்தபின் தான்,
எனக்கு நிம்மதியாக இருந்தது. பேச 98421 33144
"எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று கையெடுத்து கும்பிட்டு, கண்ணீர் விட்டு கதறுவோம். "எங்க குடும்பத்தையே காப்பாத்திட்டீங்க' என்று ஆனந்தக் கண்ணீருடன் காலில் விழுவோம்.இவை எல்லாம் யாரிடம் சொல்வோம்? கடவுளின் பிரதிநிதிகளாக நாம் மதிக்கும் டாக்டர்களிடம் தான்!கடவுளிடமும், உயிர் காக்கும் டாக்டர்களிடமும் சோகத்தையும், சந்தோஷத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொள்வோம். அழகை ஆராதிப்பது மனித இயல்பு. அந்த அழகைத் தாண்டி உடலில் ஏற்படும் மாற்றங்களை, நோயின் கொடுமைகளை அலசி ஆராய்வது, தெய்வ இயல்பு. அசுத்தம், அருவருப்பு பாராமல், அலட்சியம் செய்யாமல், அன்பு பாராட்டி அரவணைக்கும் மனித தெய்வங்கள், மருத்துவம் படித்த டாக்டர்களே.விபத்தில் அடிபடும் விலைமதிப்பில்லா உயிர்களுக்காக... திடீர் விபரீதத்தை சந்திக்கும் நோயாளிகளுக்காக... தங்களது 24 மணிநேரத்தையும் விழிப்போடு, செலவிடத் தயாராக இருப்பவர்கள் இவர்கள்.ஒவ்வொரு நோயாளியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான், டாக்டர்களின் பிரார்த்தனை. பிரார்த்தனையைத் தாண்டி, தங்களை பிரமிக்க வைத்த மருத்துவ அனுபவங்களை, "மருத்துவர்கள் தினமான' இன்று, நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்,
கட்டியுடன் வளர்ந்த குழந்தை :
24 முறை "எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்தோம் :
மார்பு எலும்புகள் நுரையீரலை கிழித்தன :
சந்தேகத்தால் கணவர் பிரிந்து விட்டார் :
வலியில்லை வயிறு பெரிதாக இருந்தது:
கைவிளக்கு வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை:
குழந்தையை த் தேள் கடித்தது :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக