கெடுபிடியாகத் தொழிலாளர்களிடமிருந்து வைப்பு நிதி பெறுவோர் உரிய காலத்தில் உரியவர்களுகு்குப் பணம் சேர வேண்டும் என்பதில் உரிய கருத்து செலுத்த வேண்டும். அவ்வாறு திரும்பச் செலுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக் கவேண்டும். அப்பொழுதுதான் அப்பாவிகள் பணம் வீணாக்கப்படாமல் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்கு உதவியாக அமையும். எனவே, செலுத்திய பணத்திற்கு உரிமை கோர வேண்டும் என்று இல்லாமல், பணி முடிந்தவுடன் உரிய முதிர்வுப் பணத்தைத் திரும்பச் செலுத்தும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
உரூ.22,636 கோடி அலட்சியம்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில், தொழிலாளர்களின்
அலட்சியம் பற்றி கூறும், துரை பாண்டியன்: நான், மத்திய அரசு ஊழியர் மகா
சம்மேளனத்தின், பொதுச் செயலராக பணியாற்றுகிறேன். பீடி, அப்பளம், ஊறுகாய்
என, சிறிய தொழிற்கூடங்கள் முதல், ஐ.டி., கம்பெனிகள் வரை, பி.எப்., எனும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும், 8.5
கோடி பேர், பி.எப்., நிதி கட்டி வருகின்றனர். ஆண்டுக்கு, 70 ஆயிரத்து, 88
கோடி ரூபாய், பி.எப்., நிதியத்தில் பணம் சேர்க்கப்பட்டு, வட்டியும்
வழங்கப்படுகிறது.
இதுவரை, 6.5 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு சில
தொழிலாளர்களுக்கு, அவர்கள் சேர்த்து வைத்த தொகையை திரும்பப் பெறுவதில்,
போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அலட்சியத்தால், தொழிலாளர்களின்
வருங்கால வைப்பு நிதியத்தில், உரிமை கோரப்படாத பணமாக, 22 ஆயிரத்து, 636
கோடி ரூபாய் உள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றி, வேறு நிறுவனங்களுக்கு
மாறும் போது, பழைய கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவோ அல்லது புதிய கணக்கிற்கு
மாற்றவோ மறந்து விடுவர். சிலர், வெளிநாடுகளில் வேலை கிடைத்து சென்று
விடுவர்; சிலர் மரணமடைந்திருப்பர். இவர்களின் பி.எப்., நிதி குறித்து,
குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் போவதால் தான், பல கோடி ரூபாய், உரிமை
கோரப்படாமல் உள்ளது. கடந்த காலங்களில், 10 முதல், 12 சதவீத வட்டி தந்ததால்,
அதிக வட்டி கிடைக்கும் என, ஆசைப்பட்டு, கணக்கை முடிக்காமல் இருந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல், கணக்கில் பணம் கட்டப்படவில்லை என்றால், வட்டி
கிடையாது என, வாரியம் முடிவு
செய்தது. இதனால், பலர் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றாலும், இன்னும் ஒரு
பெரும் தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது. எனவே, வேலையை ராஜினாமா செய்த பிறகோ
அல்லது ஓய்வுக்கு பின் கணக்கை முடித்து, மீதி பணத்தை திரும்பப் பெறுவதில்,
அலட்சியமின்றி விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக