கடை முழுவதும் பெண்களே!
பெண்கள் மட்டுமே
நிர்வகிக்கும், தொலைபேசி தொடர்பான வாடிக்கையாளர் உதவி மையத் தின் மேனேஜர்,
கீதா: நான், சென்னையில் உள்ள, ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தில்,
வாடிக்கையாளர் சேவை மைய மேனேஜராக பணியாற்றுகிறேன். எல்லா அலுவலகங்களிலும்,
ஆண்களே அதிக அளவில் பணியாற்றுவர். பெயரளவில் மட்டுமே, பெண்கள் பணியாற்றும்
சூழ்நிலை உள்ளது. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் வேலை செய்தாலும், ஆண்களின்
ஆதிக்கமே மேலோங்கி வருகிறது. எங்கள் நிறுவனத்தின் புதிய கிளையை, சென்
னையின், டி.டி.கே., சாலையில் அமைக்க தீர்மானித்தோம். எங்களின் மற்ற
மையங்களை விட, இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என, திட்டமிட்ட
போது, பெண்களை வைத்தே அனைத்து பணிகளையும் செய்வது என, முடிவெடுத்து, 2012
நவம்பர் மாதத்தில், திட்டமிட்டபடி புதிய கிளையை
துவக்கினோம்.அலுவலகத்திற்குள் நுழைந்தாலே, பாதுகாப் பிற்கு நிற்கும்,
"செக்யூரிட்டி' அலுவலக பணிகளில் ஈடுபடும், "டேட்டா என்ட்ரி' பெண்கள்,
மேனேஜராக இருக்கும் நான் என, 15 பேரும் பெண்களே. அதனால், எங்களின்
மையத்திற்கு, "ஏஞ்சல் ஸ்டோர்' என, செல்ல பெயர் வைத்திருக்கிறோம். ஆண்களுடன்
வேலை பார்த்த அனுபவத்தை விட, பெண்களுடன் மட்டுமே பணியாற்றும் இச்சூழல்,
வசதியாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இதனால், சில பாதகங்களும்
வருவதுண்டு. சில ஆண் வாடிக்கையாளர்கள், வாய்ச்சண்டையில் ஈடுபட்டால்,
அனைத்து பெண்களும் ஒற்றுமையாக களத்தில் இறங்கி, பிரச்னையை சமாளிக்கிறோம்.
அப்போது, சில வாடிக்கையாளர்களும், எங்களுக்கு உதவி கரம் நீட்டுவது,
சந்தோஷமாக உள்ளது. "பொம்பளைங்க கையில் முழு பொறுப்பையும் கொடுத்தா, காரியம்
வீணாகும்' என, யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே, அவர் அவர் வேலையில்,
இரண்டு மடங்கு கவனம் செலுத்தி, உழைக்கிறோம். பெண்களால், ஒரு அலுவலகம்
முழுவதையும், வெற்றிகரமாக இயக்க முடியும் என்பதற்கு, நாங்கள் சாட்சிகளாக
இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக