ஞாயிறு, 30 ஜூன், 2013

காங்கிரசுடன் கூட்டணி இல்லை - சில நாள் வரைக்கும்

< திமுகவைச் சேர்ந்த யாரும் மத்திய அரசில் சேர்ந்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் >என்று சொல்லி அமைச்சரவையில் சேர்க்கப்படுவதற்கு அச்சாரம் போடும் கலைஞர் உண்மையிலேயே அரசியல் தந்திரிதான்.  சோனியாவின் இசைவுடன் கூட்டணி இல்லை என்பவர் மதச்சக்திகளின் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக ஒன்று சேர்ந்ததாகச் சொல்லப் போகும் நாள் வரத்தான் போகிறது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காங்கிரசுடன் கூட்டணி இல்லை


மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவை காங்கிரஸ் ஆதரித்திருந்தாலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டது.
இதனால் இலங்கைப் பிரச்னையை திமுக மறந்துவிட்டதாக சிலர் சொல்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தேமுதிக, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மைதான்.
இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியோடு திமுக உறவு கொண்டுவிட்டது, இலங்கைப் பிரச்னையைக் கைகழுவிட்டது என்றெல்லாம் வெறுப்பு அரசியல் செய்கின்றனர்.
13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யும் இலங்கை அரசின் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று இப்போதும் திமுக வலியுறுத்துகிறது.
எனவே, இலங்கைப் பிரச்னை வேறு. மாநிலங்களவைத் தேர்தல் வேறு. கூட்டணி என்பது வேறு.
ஆனால் அனைத்தையும் ஒன்றாக இணைத்து குழப்பம் விளைவித்துவிட சிலர் முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகியபோது, திமுகவின் மத்திய அமைச்சர்களும் விலகினார்கள்.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த காரணத்தால் திமுகவைச் சேர்ந்த யாரும் மத்திய அரசில் சேர்ந்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

1 கருத்து:

  1. "தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!"-திரு."இலக்குவனார் திருவள்ளுவன். வணக்கம் நண்பரே.மிக மிக மோசமான கால கட்டத்திற்கு வரலாற்றின் வழியே காலபோக்கில் தமிழினம் வந்தடைந்துள்ளது.தனது சொந்த மொழியிலே கல்வி பெற விரும்பாத நிலை! தமிழில் கற்ப்பிக்கும் பள்ளிகளின் பயன் எதுவும் இல்லை என்று ஆங்கில மொழிவழி, அதுவும் பன்னாட்டு பள்ளி (international scholl)மற்றும் உலகபள்ளி ( Global school) என்று தோன்றியுள்ளன. இவற்றின் கார்ணமாக அரசே தனது பள்ளிகளில் ஆனகில் மொழி வழி கல்வியை அறிமுகபடுத்திவிட்டது. வளரும் தலைமுறையினரின் அறிவில் மொழி திறமை படிப்படியாக் குறையும். வழகொழியும். பிறகு பின்னொரு கால கட்டத்தில் மொழி கைவிடப்படும்! எனவே " /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/" என்ற சொற்கள் இனத்தையும் மொழியையும் காப்பாற்ற பயன்படுமா என்பது மிக சந்தேகமே.
    பதிவுசெய்தவர் ப.பத்மநாபன் 06/30/2013 11:22

    பதிலளிநீக்கு