சனி, 6 ஜூலை, 2013

பாதுகாப்பான கணினி வசதி கொடுங்கள்!

பாதுகாப்பான கணினி வசதி கொடுங்கள்!
 
குழந்தைகள், பாதுகாப்பான கணினி இணையத்தை ப் பயன்படுத்த, பெற்றோருக்கு வழிகாட்டும், ஆசிரியர் செயக்குமார்: நான், சென்னை இலயோலா கல்லூரியில், கணினி துறை தலைவராக இருக்கிறேன். இன்றைய குழந்தைகள், சிறு வயதிலேயே, கணினி மற்றும் மொபைலில், கேம்ஸ் விளையாட ஆரம்பித்த பின், அதில் வேறு என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என, தேட ஆரம்பிப்பர். இத்தேடலின் அடுத்த கட்ட விளைவே இணையதளம். இங்கு, ஆபாசமான பல விஷயங்கள், "அன்லிமிடெட்' ஆக வழங்கப்படுகின்றன. எனவே, பாதுகாப்பான கணினி இணையத்தை, குழந்தைகளுக்கு தருவது மட்டுமின்றி, அதை பயன்படுத்தும் வழிமுறைகளையும் சொல்லி தருவது,
பெற்றோரின் கடமை. முதலில், குழந்தைகளுக்கான தனியறையில், கம்ப்யூட்டரை பயன்படுத்த அனுமதிக்காமல், பெற்றோரின் பார்வை படுகிற இடத்தில் கணினியை வைத்தால், தவறான வழிக்கு, முயற்சிக்க மாட்டார்கள். இதனால், கம்ப்யூட்டர் கேம்ஸ் மற்றும் தேவையற்ற நேரங்களில் கணினியை பயன்படுத்துவது குறையும்.
தேவையான, "சாப்ட்வேரை' மட்டும், "இன்ஸ்டால்' செய்யுங்கள். இணையத்தை கட்டாயம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்றால், ஆபாச வலைதளத்திற்குள் செல்ல முடியாதபடி, "ரெஸ்ட்ரிக்ட்' செய்யுங்கள். சமூக வலைதளங்கள், சாட்டிங் போன்றவற்றை அனுமதிக்காதீர்கள். ஏனெனில், குழந்தைகளுக்கு இது தேவையற்றது.
குழந்தைகளின் எந்த விவரத்தையும், இணையத்தில் வெளியிட அனுமதிக்காதீர்கள். கணினியின், "ஹிஸ்ட்ரி ஆப்ஷனு'க்கு சென்று, தினமும் அவர்கள் என்ன செய்கின்றனர் என, கண்காணியுங்கள். குழந்தைகள், இணையத்தில் பயனுள்ளவற்றை செய்யும் போது, ஊக்குவிக்க மறக்கக் கூடாது. அவர்களின் ஆர்வம் தொடர்பான விஷயங்களை, சொல்லி தாருங்கள். முடியாத போது, அது தொடர்பான நல்ல புத்தகங்களை வாங்கி தாருங்கள். பெற்றோர், இது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், பல ஆபத்துகள் விரிந்து கிடக்கும் தொழில்நுட்ப வலையில் சிக்காமல், குழந்தைகளை பாதுகாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக