கவிஞர் காசி ஆனந்தனுக்கு ச் சிற்பி இலக்கிய விருது
கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் கவிஞர் இந்திரன் ஆகிய இ
ருவரும் 2013-ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி இலக்கிய விருதுக்குத் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்
கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. இதில் 2013-ஆம் ஆண்டுக்கான
கவிஞர் சிற்பி இலக்கிய விருதுக்கு ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர்
இந்திரன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையும் நினைவுக் கேடயமும்
வழங்கப்படுகின்றன. இதேபோல சூழலியல் அக்கறை மிக்க சமூகப் பணியாளர் ஓசை
காளிதாஸýக்கு சமூக நற்பணிக்காக பொ.மா.சுப்பிரமணியம் விருது
வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பொள்ளாச்சி
என்.ஜி.எம். கல்லூரி விவேகானந்தர் அரங்கில் நடைபெறும் விழாவில்
வழங்கப்படும்.
விழாவுக்கு கோயம்புத்தூர் பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ்
வாணவராயர் தலைமை ஏற்று, விருதினை வழங்குகிறார். தமிழருவி மணியன் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக