தடுப்பூசி காப்பீடு மாதிரி!
குழந்தைகளுக்கு த், தடுப்பூசி போடுவதன் அவசியத்தை க் கூறும், மருத்துவர் சுரேசு செல்லையா: உரிய காலத்தில், குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி, "இன்ஷூரன்ஸ்' போன்றது. இது, குழந்தையின் உயிர் காக்கும் அரணாக அமைவதோடு, பிற்காலத்தில், பெரும் செலவையும், மன உளைச்சலையும் தவிர்க்கிறது. இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, சின்னம்மை, புட்டாளம்மை, "ஹெபடைடிஸ் பி' எனும் மஞ்சள் காமாலை போன்ற, ஆபத்தான நோய்கள் வந்தால், அதை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள், நம்மிடம் இல்லை. தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி நோய்களால், குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகி விடும். அதனால், தடுப்பூசி போடுவதில், மிகுந்த அக்கறை காட்டுவது அவசியம். தடுப்பூசி போட அதிகம் செலவாகிறது என, பெற்றோர் காரணம் கூற முடியாது. ஏனெனில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில், பெரும்பாலான தடுப்பூசிகள் இலவசமாகவே போடப்படுகின்றன. காச நோயை தடுக்க தோல் ஊசியும், இளம்பிள்ளை வாதத்தை தடுக்க, போலியோ சொட்டு மருந்தும் தரலாம். தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி, மூளை காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலையை தடுக்க, டி.பி.டி., எனும், முத்தடுப்பு ஊசி போடப்படுகிறது.
பன்றி காய்ச்சலுக்கான வைரஸ் உட்பட, மூன்று வித வைரஸ்களை தடுக்க, "ப்ளூ' தடுப்பூசி போடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான, கர்ப்பவாய் புற்று நோய்க்கு, எச்.வி.பி., தடுப்பூசியும் போடப்படுகிறது. நாய் கடிக்கு, "ரேபிஸ்' தடுப்பூசியும், வளர்ப்பு பிராணிகள் உள்ள வீடுகளில், முன்னெச்சரிக்கையாக, வளர்ப்பு பிராணி தடுப்பூசி போன்ற தடுப்பூசிகளை, போட வேண்டும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதும், சில சங்கடங்கள் ஏற்படுவது இயல்பானதே. காய்ச்சல் மாதிரியான, சிறு சிறு உபத்திரவங்கள் தலைக் காட்டலாமே தவிர, வேறெந்த பாதிப்பும் வரப் போவதில்லை. காய்ச்சலுக்கு, மருத்துவர் தரும் மருந்துகள் மூலமே சரி செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக