செவ்வாய், 16 ஜூலை, 2013

மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான்

தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு த் தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான் அறிக்கை
தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான் அறிக்கை
சென்னை, ஜூலை. 16–
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில், மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கு ரைஞரும், தமிழில் வாதாட உரிமை கோரி 2010-ம் ஆண்டில் நடந்த சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளியுமான பகத்சிங், தனது வாதத்தை தமிழில் பேசத் தொடங்கியதும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி இந்திய அரசமைப்பு பிரிவு 348-ஐயும், உச்ச நீதிமன்றத்தில் ராஜ் நாராயணன் இந்தி மொழியில் வாதிட்டதை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவையும் காரணம் காட்டி, தமிழில் வாதிடுவதை ஏற்க முடியாது என்று கூறியது மட்டுமின்றி, அதையே காரணமாகக் காட்டி மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளார். இது வேதனைக்குரிய நடவடிக்கையாகும்.
தமிழ் மொழியில் வாதிடும் வழக்குரைஞர்களிடம் வழக்கை கொண்டு செல்லாதீர்கள், அதனை நீதிமன்றம் ஏற்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக இந்த நடவடிக்கை இருக்கிறது. இது தமிழ் மொழியை, அதன் தகுதி நிலையை இழிவுபடுத்துவதாகும். தமிழ் மொழியில் வாதாட மறுப்பது என்பது எமது இனத்தின் அடிப்படை உரிமை மறுப்பே, அதனை தன்மானமுள்ள தமிழினம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
இந்திய நாடு வெள்ளையரின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தபோது கூட, அவன் வெளியிட்ட நாணயத்தில் தமிழில் எழுத்தப்பட்டிருந்தது. ஆனால், விடுதலை பெற்ற நாடாக இந்தியா மாறிய நாளில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழிக்கு உரிய நிலை மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக டெல்லியிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைதான் உள்ளதெனில், தமிழர் விடுதலை பெற்ற ஒரு நாட்டின் அடிமை இனமா? என்று கேட்கிறோம்.
தமிழ்நாட்டின் நிர்வா கத்தை, அது தொடர்பான நடவடிக்கைகளை முறை படுத்தும் சட்டமியற்றக்கூடிய அரசமைப்பு உரிமை தமிழ் நாட்டிற்கு உள்ளதென்றால், எம் மாநிலத்தில் இயங்கும் உயர் நீதிமன்றத்தில் வழக் காடு மொழியாக தமிழ் இருப்பதற்கு மட்டும் சட்ட மியற்றும் அதிகாரம் எமக் கில்லையா? எனது இனத்தின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் அல்லவா இது?
உயர் நீதிமன்றங்களில் எந்த மொழியில் அல்லது மொழிகளில் வாதிடலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களின் சட்டப்பேரவைக்கே உள்ளது என்கிற திருத்தத்தை கொண்டு வர தமிழக அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை இனப்பிரச்சனையில் தானே தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றியதுபோல், தமிழை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வகை செய்யும் அரசமைப்புத் திருத்தத்தை கொண்டு வர வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதல்வரே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். அப்படிப்பட்ட முயற்சி தோல்வியுற்றால், இந்தி மொழிக்கு எதிராக கிளர்ந் தெழுந்ததுபோல், மற்றொரு மொழிப்போருக்கு தமிழினம் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக