ஆர்வமே ஆரம்ப ப் புள்ளி!
ஆர்வமுடன், 22 கைவினை ப் பொருட்கள் செய்வதை க் கற்று,
அதை பிறருக்கும் சொல்லி தரும், சுதா செல்வகுமார்: என் சொந்த ஊர்,
கும்பகோணம். திருமணமாகி, சென்னையில் வசிக்கிறேன். கிராமத்தில் பிறந்தாலும்,
சென்னை நகரத்தில், என்னால் சாதிக்க முடிந்ததற்கு, ஆர்வமே காரணம்.
கல்லூரியில், பொழுது போக்கிற்காக,"கிராப்ட்' வகுப்பிற்கு சென்ற போது தான்,
என் சாதனைக்கான ஆரம்ப புள்ளி துவங்கியது. அங்கு, ஆர்வத்தோடு கைவினை
பொருட்கள் செய்ய கற்றுக் கொண்டேன். அதனால் தான், பெயின்டிங், ஜுவல்லரி
மற்றும் பிளவர் மேக்கிங் முதல் சாம்பிராணி, மெழுகுவர்த்தி, பேப்பர் பை
தயாரிப்பது என, 22 கைவினை பொருட்களை செய்யும் அளவிற்கு முன்னேறினேன்.
கிராப்ட் ஏரியாவில், எனக்கென ஓர் அங்கீகாரத்தை பெற முடிந்தது. முதலில்
தி.நகரில், "கிராப்ட் ஷாப்' நடத்தி நஷ்டமடைந்தேன். குடும்ப உறுப்பினர்களின்
ஊக்கம், "தொடர்ந்து முயற்சி செய்' என, உந்தியது. மீண்டும் வள்ளுவர்
கோட்டத்தில் கடை போட்டேன். அங்கு, நானே எதிர்பாராத வகையில், நல்ல வரவேற்பு
கிடைத்தது. இதன் மூலம், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில், என் திறமை
வெளிகாட்டப்பட்டது. ரேடியோவில் சில காலம், ஆர்.ஜே.,வாக பணிஆற்றினேன். என்
திறமை, மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில், மகளிர் சுயஉதவி
குழுக்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில், கைவினை பொருட்களை
செய்வது குறித்து, "ஒர்க் ஷாப்' நடத்தினேன். தற்போது, "எஸ்.எஸ்.ஆர்ட் அண்ட்
கிராப்ட் இன்ஸ்டிடியூட்' மூலம், வீட்டில் இருந்தபடியே, பெரியவர் முதல்,
சிறியவர் வரை, கிராப்ட் வகுப்புகள் எடுக்கிறேன். திருமணம் ஆன பிறகே, சமைக்க
கற்று கொண்டாலும், இன்று சமையல் போட்டிகளிலும் கலந்து, வெற்றி பெற
முடிகிறது என்றால், நான் ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் கற்றதே காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக