செவ்வாய், 16 ஜூலை, 2013

கல்லூரிப் பெண்களும் சம்பாதிக்கலாம்!

கல்லூரி ப் பெண்களும் சம்பாதிக்கலாம்!

வெறும், 20 உரூபாய்  மருதாணிக் கூம்பு வாங்கி, 2,000 சம்பாதிக்கும், கல்லூரி மாணவி உமா மகேசுவரி: நான், கும்பகோணம், அரசு கவின் கலைக் கல்லூரியில், காட்சி தகவல் தொடர்பு மற்றும் வடிவமைப்பில், மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். சிறு வயதில் இருந்தே, நன்றாக படம் வரைவேன். அதனால், பக்கத்து வீட்டு குட்டீஸ் மற்றும் கல்லூரி மாணவியரின் கைகளில், மெஹந்தி போட்டு பழகினேன்.பகுதி நேர வேலையாக, தெரிந்தவர்களுக்கு போட ஆரம்பித்து, இன்று, கும்பகோணத்தில் நடைபெறும், பெரும்பாலான திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு, நான் தான், மெஹந்தி போடுகிறேன். டிசைனை பொறுத்து, 150 முதல், 250 ரூபாய் வரை கட்டணம் வாங்கி, மாதம் குறைந்தது, 2,000 சம்பாதிக்கிறேன். விடுதியில் தங்கி படிப்பதால், அறை வாடகை, சாப்பாடு என, என் செலவுகளுக்கு பயன்படுத்துகிறேன்.மணப்பெண்ணுக்கு போடும் மெஹந்தியை கூட, ஒன்றரை மணி நேரத்தில் முடித்து விடுவேன். 15 நாட்கள் வரை அழியாமல் இருக்கும் பாரம்பரிய, "மெஹந்தி டிசைன்கள்'; ஒரு வாரம் வரை இருக்கும், "அரபிக் டிசைன்கள்'; புடவைக்கு ஏற்ற வண்ணங்களில், "ஜர்தோஸி டிசைன்கள்' என, அனைத்தையும் போடுவேன்.மெஹந்தி போடுவதை, கல்லூரி மாணவியர் கற்றால், "பார்ட் டைம்' வேலையாகச் செய்து, உங்கள் செலவுக்கான பணத்தை, நீங்களே சம்பாதிக்கலாம். பக்கத்தில் உள்ள, "பியூட்டி பார்லர் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனங்களுக்குச் சென்று, "மெஹந்தி போட ஏதாவது ஆடர் வந்தால் சொல்லுங்கள்' என, நீங்களாக முன்வந்து, ஒரு முறை செய்து காட்டுங்கள். இதன் மூலம், வாடிக்கையாளர்களை அதிகரிக்க முடியும்.குனிந்து, நிமிர்ந்து, கூர்ந்த கவனத்துடன் மெஹந்தி போடுவதால், ஓய்வு அவசியம். இதில், அதிக முதலீடு தேவையில்லை; 20 ரூபாய்க்கு கோன் வாங்கினாலே, 2,000 வரை சம்பாதிக்கலாம். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், ஒரு டிசைனுக்கு, 1,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக