எறும்புக்கு த் தீனி போடுவதில் மனநிறைவு
கடந்த, 20 ஆண்டுகளாக த் திருவான்மியூர் – கொட்டிவாக்கம் கடற்கரையில்,எறும்புகளுக்கு தீனி போட்டு வருகிறார் 51 வயது தேவாராம். தினசரி கடற்கரையில் காலையில் 7:30 மணிக்கு திருவான்மியூர் ஆர்.டி.ஓ சிக்னலில் இருந்துதிருவான்மியூர் – கொட்டிவாக்கம் கடற்கரை வரையுள்ள 2 கி.மீ., தூரம் நடந்து சென்று எறும்புக்கு தீனி போடுகிறார்.திருவான்மியூரில் அடகு கடை வைத்துள்ள இவர், எறும்புக்கு தீனி போடுவது புண்ணியம் என்ற அடிப்படையில் அதை பின்பற்றுவதாகவும், அதன் மூலம் மனநிறைவு கிடைப்பதாகவும்கூறுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
எப்போதில் இருந்து இந்த பழக்கம் வந்தது?
எங்கள் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பல்லி மாவட்டத்தில், இந்த பழக்கம் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகங்களிடமும் இருக்கிறது.எறும்புக்கு தீனி போட்டால் புண்ணியம் என்று ஒரு நம்பிக்கை. சென்னைக்கு 12 வயதில், 1978ல் வந்தேன். 1993ம் ஆண்டில் இருந்து எறும்புகளுக்குதீனி போட துவங்கினேன். அப்போது காலி மனைகளாக இருந்த பகுதிகள், இன்று கட்டடங்களாக மாறி விட்டதால் கடற்கரைக்கு சென்று எறும்புக்கு தீனி போடுகிறேன்.
எறும்பு தீனியை நீங்களேதயாரிக்கிறீர்களா? வெளியில்வாங்குகிறீர்களா?
நானே தயாரிக்கிறேன். மாதா மாதம் 60 கிலோ கம்பு வாங்குகிறேன். அதில் தினசரி 2 கிலோவை மாவாக அரைத்து கொள்வேன். என் மனைவி,பிள்ளைகளும் உதவி செய்வர். இதற்கு மாதம் 1,500 ரூபாய் செலவாகிறது.
இந்த செயல் புண்ணியம் என்றநம்பிக்கை எப்படி வந்தது?மத நம்பிக்கையா?
அது எனக்கு தெரியாது. ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கள் ஊரில் இந்த நம்பிக்கை உள்ளது. என்னுடைய அப்பா இதை பின்பற்றினார். நானும் நம்புகிறேன். மற்றபடி, எந்த மத நூலில் இது பற்றி கூறியிருக்கிறது என்று எதுவும் எனக்கு தெரியாது. அது தேவையுமில்லை.
கடந்த 20 ஆண்டுகளில், இதை ஏன் செய்ய வேண்டும் என, தோன்றியதுண்டா?
இல்லை. புண்ணியம் என்ற நம்பிக்கையில் இந்த செயலை துவங்கினாலும், இப்போது இதை ஒரு கடமையாகவே செய்கிறேன். இதில் எந்தவித பலன்களையும் எதிர்பார்க்கவில்லை. துன்பம் வந்தாலும் இந்த செயலை நிறுத்த வேண்டும் என்று நினைத்ததில்லை.
அப்படியானால் இந்த பழக்கம், உங்கள் பண்பாட்டுடன் உங்களை இணைத்து கொள்ளஒரு கருவியாக பயன்படுகிறதா?
ஆமாம். யாருக்குமே அவரவர் நம்பிக்கை கொண்டுள்ள விஷயங்களை கடைப்பிடிப்பதில் ஒரு திருப்தி ஏற்படும். எனக்கு என்னுடைய பண்பாட்டுடன் வாழ இந்த பழக்கம் ஒரு வாய்ப்பாக உள்ளது. சிலசமயம் என்னுடைய மனைவியும் ஒன்றாக இணைந்து தீனி போடுவார். இதில் எனக்கு முழு மனநிறைவு கிடைக்கிறது.
தமிழ் வாசிக்க தெரியுமா?
பேச மட்டுமே செய்வேன். தமிழ் எழுத படிக்க கற்று கொள்ளவில்லை.
35 ஆண்டுகளாக சென்னையில்இருக்கிறீர்கள். எனினும்ராஜஸ்தானியராகவே வாழவிரும்புகிறீர்களா?
தெரியவில்லை. எனக்கு இப்படி இருப்பதுமட்டுமே பிடிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக