வெள்ளி, 19 ஜூலை, 2013

நீதிமன்றத்தில் தமிழில் வாதாட இசைவு : மதுரைக் கிளை நீதிபதி

காரணம் என்னவாக இருந்தாலும், தவற்றினைத் திருத்திக் கொண்ட நீதிபதிக்குப் பாராட்டு. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட நிலையான ஆணையே பிறப்பிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/நீதிமன்றத்தில் தமிழில் வாதாட இசைவு : மதுரைக் கிளை நீதிபதி

நீதிமன்றத்தில் தமிழில் வாதாட விதிக்கப்பட்டிருந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி மணிக்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே, நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை திரும்பப் பெறுவதாக, கிளை நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் இன்று கூறினார்.
வழக்குறைஞர் ராமசாமியின் 2 வழக்குகளை தமிழில் வாதாட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக