திங்கள், 24 ஜூன், 2013

வார இறுதி நாட்களை மாற்றிய சவுதி அரேபியா

வார இறுதி நாட்களை மாற்றிய சவுதி அரேபியா

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வசதியாக, சவுதி அரேபியாவில் வார இறுதி நாட்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமையாக மாற்றியுள்ளது.
ஜூன் 29ம் தேதி முதல், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் அங்குள்ள கல்வி, பணி நிறுவனங்களுக்கு வார விடுமுறை நாட்களாக மாற்றி அமைக்கும் திட்டத்துக்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டது.
ஏற்கனவே வியாழன், வெள்ளிக் கிழமைகள் வார இறுதி நாட்களாக இருந்த நிலையில், அதனை வெள்ளி, சனியாக மாற்றி ஓமன் அரசு அறிவித்ததை அடுத்து, சவுதி அரேபியாவும் இந்த மாற்றத்தை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக