திங்கள், 3 டிசம்பர், 2012

யாழ் மாணவர்களை விடுதலை செய்- தா. பா

யாழ் பல்கலை மாணவர்களை விடுதலை செய்ய தா. பாண்டியன் வலியுறுத்தல்

First Published : 03 December 2012 06:00 PM IST
இலங்கையில், கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து  தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையிலுள்ள யாழ்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். நான்கு மாணவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், மனித உரிமை மீறல்கள் மிகவும் கூடுதலாகியுள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மிகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வரும் இன்றைய சூழலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இந்த செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
பயங்கரவாத சட்டத்தில் மாணவர்கள் கைது செய்யபட்டிருப்பதையும், மாணவர்கள் மீதான தாக்குதலையும் இலங்கையின் மாத்ரேயிலுள்ள அமைந்தள்ள பல்கலைக் கழக மாணவர் சங்கமும், கண்டியிலுள்ள பல்கலைகழக மாணவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் எதிர்ப்பு தெரித்துள்ளது.
பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யபட்டுள்ள யாழ் பல்கலைகழக மாணவர் சங்க செயலாளர் பி.தர்ஷன், சாலமன், கணேச  மூர்த்தி, சுதர்சன கனக சுதந்தரம் ஆகிய நால்வரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக