ஞாயிறு, 2 டிசம்பர், 2012

தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண்

Photo: தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண். 

ஏறத்தாள 25 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் போராளிகள் குட்டிமணி ஜகன் இருவரின் நினைவாக எழுப்பட்ட தூண் இது. சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் பாலத்திற்கு அருகாமையில் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தத் தூண்.
 
குட்டிமணி தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவர் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றார். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழுமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவர் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவர் நாவும் அறுக்கப்பட்டது

ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவர் . அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவர் . இவரும் சிங்கள இனவெறி ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர் . 

இவர்கள் இருவரின் நினைவாகவே இந்தத் தூண் எழுப்பப்பட்டது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின் காங்கிரஸ் வெறியர்கள் இந்தத் தூணை சேதப் படுத்தினர். பின்னர் பல காலத்திற்கு பின் இந்தத் தூண் மறு சீரமைக்கப் பட்டு புதுப் பொலிவுடன் மாவீரர் தூண் என வழங்கப்பட்டது. 

2012 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் இந்த தூணுக்கு முன் மாவீரர்களுக்கு பழ நெடுமாறன் , சீமான் போன்ற தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆயிரகக்கணக்கான மக்களும் மாவீர்களுக்கு இங்கு வந்து அஞ்சலி செலுத்தினர் ஆவடியில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் இந்த தூணை பராமரித்து வருகிறார்கள். இந்த தூணை கடந்து போகும் போதெல்லாம் மாவீரர்கள் நம் நினைவிற்கு வருவார்கள் . 

இருந்தும் இந்த தூண் குறித்து பல தமிழ் உணர்வாளர்களுக்கு தெரியாது. தமிழகத்தில் மாவீரர்களுக்கு கட்டப்பட்ட ஒரே தூண் இதுவே ஆகும் . அதனால் இனி வரும் காலங்களில் தமிழர்கள் இந்த தூணை மறக்காமல் அவ்வப்போது சென்று மாவீரர்களை நினைவு கூர வேண்டும் அவர்களுக்கு மலர் வணக்கம் செய்து அஞ்சலி செலுத்த வேண்டும் . இதை ஒரு வரலாற்று சின்னமாக உருப்பெறச் செய்தல் வேண்டும் . ஆட்சியாளர்களும் இங்கு வந்து இந்தத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிலை உருவாக வேண்டும் . வாய்ப்பு உள்ள தோழர்கள் ஆவடி சென்று இந்த தூணுக்கு வணக்கம் செலுத்த வேண்டுகிறோம் .

படம் உதவி : காரை மைந்தன்
தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண்.

ஏறத்தாள 25 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் போராளிகள் குட்டிமணி ஜகன் இருவரின் நினைவாக எழுப்பட்ட தூண் இது. சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் பாலத்திற்கு அருகாமையில் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தத் தூண்.

குட்டிமணி தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவர் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் ம
ூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றார். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழுமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவர் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவர் நாவும் அறுக்கப்பட்டது

ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவர் . அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவர் . இவரும் சிங்கள இனவெறி ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர் .

இவர்கள் இருவரின் நினைவாகவே இந்தத் தூண் எழுப்பப்பட்டது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின் காங்கிரஸ் வெறியர்கள் இந்தத் தூணை சேதப் படுத்தினர். பின்னர் பல காலத்திற்கு பின் இந்தத் தூண் மறு சீரமைக்கப் பட்டு புதுப் பொலிவுடன் மாவீரர் தூண் என வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் இந்த தூணுக்கு முன் மாவீரர்களுக்கு பழ நெடுமாறன் , சீமான் போன்ற தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆயிரகக்கணக்கான மக்களும் மாவீர்களுக்கு இங்கு வந்து அஞ்சலி செலுத்தினர் ஆவடியில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் இந்த தூணை பராமரித்து வருகிறார்கள். இந்த தூணை கடந்து போகும் போதெல்லாம் மாவீரர்கள் நம் நினைவிற்கு வருவார்கள் .

இருந்தும் இந்த தூண் குறித்து பல தமிழ் உணர்வாளர்களுக்கு தெரியாது. தமிழகத்தில் மாவீரர்களுக்கு கட்டப்பட்ட ஒரே தூண் இதுவே ஆகும் . அதனால் இனி வரும் காலங்களில் தமிழர்கள் இந்த தூணை மறக்காமல் அவ்வப்போது சென்று மாவீரர்களை நினைவு கூர வேண்டும் அவர்களுக்கு மலர் வணக்கம் செய்து அஞ்சலி செலுத்த வேண்டும் . இதை ஒரு வரலாற்று சின்னமாக உருப்பெறச் செய்தல் வேண்டும் . ஆட்சியாளர்களும் இங்கு வந்து இந்தத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிலை உருவாக வேண்டும் . வாய்ப்பு உள்ள தோழர்கள் ஆவடி சென்று இந்த தூணுக்கு வணக்கம் செலுத்த வேண்டுகிறோம் .

படம் உதவி : காரை மைந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக