First Published : 01 Feb 2012 03:01:47 PM IST
கொழும்பு, பிப்.1: இறுதிக்கட்ட போர் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் அளிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கைப் போரின்போது ராணுவத் தாக்குதலில் பெருமளவில் மக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்றும், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து இது குறித்து நாங்களே விசாரிப்போம் என்று அறிவித்த இலங்கை அரசு, தனது அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. இதில், ராணுவத்தினர் மீது எந்த குற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இறுதிக்கட்ட போர் குறித்த அறிக்கையை ஐ.நாவிடம் அளிக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.அதிபர் ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கே தெரிவித்தார்.அதே நேரத்தில், அரசின் விசாரணை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்பதால், அதை ஐ.நா.விடம் அளிக்க தயங்குகின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள்
அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று நொண்டி சாக்கு சொல்லி ஈராக் மீது படைஎடுத்தீர்களே. போரில் மனிதஉரிமை மீறல் நடந்தற்கான விசாரண அறிக்கை தராததற்கு இலங்கை மீது போர் தொடுப்போம் என ஒரு மிரட்டலாகிலும் விடலாமே.
By வரதராஜ் k
2/1/2012 7:41:00 PM
2/1/2012 7:41:00 PM