First Published : 31 Jan 2012 12:45:36 AM IST
அறிவியல் என்பதே பொய். நேற்று ஒன்றை உண்மையென்று அடித்துச் சொன்ன அறிவியல், இன்று அதைத் தவறு என்று சொல்கிறது. அப்படியானால் அறிவியலறிஞர்கள் சொல்வதை எப்படி உண்மை என்று நம்புவது? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். அறிவு என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மாறிக் கொண்டே இருப்பது. அறிவியல் உண்மைகளும் அப்படித்தான். இதை ஏற்றுக் கொண்டால் அறிவியல் என்பதே பொய் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். எதற்கு இந்த வீண் பேச்சு என்கிறீர்களா? காரணம் இல்லாமல் இல்லை. ஐன்ஸ்டீன் என்ற உடனேயே நமக்கு நினைவுக்கு வருவது அணுகுண்டுகள்தாம். அதையும் தாண்டி ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகள் மிக மிக முக்கியமானவை. குறிப்பாக, அவருடைய சிறப்புச் சார்பியல் தத்துவம் அறிவியல் உலகில் மிக மிக முக்கியமானது. அந்தச் சிறப்புச் சார்பியல் தத்துவம் இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. உலகில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பே இதற்குக் காரணம். அதென்ன சிறப்புச் சார்பியல் தத்துவம்? அது எப்படி ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது? என்ன புதுக் கண்டுபிடிப்பு? என்று புருவம் சுருங்க, கேள்விகளை எழுப்பினோம் பேராசிரியர் துரைசாமியிடம். அவர் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல்துறையில் பேராசிரியராக இருக்கிறார். ""மதுரை எந்தத் திசையில் இருக்கிறது? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? நாகர்கோவிலில் இருந்து வடக்கே, சென்னையிலிருந்து தெற்கே, தேனியிலிருந்து கிழக்கே, சிவகங்கையிலிருந்து மேற்கே என்றுதான் சொல்வீர்கள். இன்று என்பது நேற்றிலிருந்து பார்க்கும்போது நாளையாக இருந்தது. நாளையில் இருந்து பார்க்கும்போது நேற்றாக இருக்கும். நடப்பதை விட சைக்கிளில் செல்வது வேகம். சைக்கிளைவிட காரில் செல்வது வேகம். காரை விட விமானத்தில் செல்வது வேகம். அப்படியானால் வேகம் என்று சொல்லும் போது எதைவிட வேகம்? என்ற கேள்வி வந்துவிடுகிறது. இப்படி எல்லா விஷயங்களும் ஒன்றையொன்று சார்ந்துதான் இருக்கிறது. அப்படி ஒப்பிட்டுத்தான் நாம் பார்க்க முடியும். இதுதான் சார்பியல் தத்துவத்தின் அடிப்படை. ஆனால் ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்பியல் தத்துவம் வித்தியாசமானது. அது பிறவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒளியின் திசை வேகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒளியின் வேகம் சார்பற்றது என்பதுதான் அவருடைய கோட்பாட்டின் அடிப்படை. வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் விநாடிக்கு 29,97,92, 458 மீட்டர். நாம் இதுவரை "அறிந்த' பிரபஞ்சத்தில் இதைவிட மிஞ்சிய வேகம் என்று எதுவுமில்லை என்ற அடிப்படையில்தான் ஐன்ஸ்டீன் தனது சிறப்புச் சார்பியல் தத்துவத்தை உருவாக்கினார். ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற உ = ம்ஸ்ரீ2 என்ற ஆற்றலைப் பற்றிய சமன்பாடும் ஒளியின் இந்த திசை வேகத்தை அடிப்படையாகக் கொண்டதே. இதில் உ (உய்ங்ழ்ஞ்ஹ்) என்பது ஆற்றல். ங (ஙஹள்ள்) என்பது பொருண்மை. இ (ஸ்ங்ப்ர்ஸ்ரீண்ற்ஹ்) என்பது ஒளியின் திசை வேகம். ஐன்ஸ்டீன் சொன்னது மாதிரி ஒளியின் திசை வேகம்தான் உலகிலேயே அதிகபட்ச வேகம் என்றால் இந்தச் சமன்பாட்டில் மாறுதல் எதுவும் வந்துவிடாது. ஆனால் ஒளியை விட அதிகபட்ச வேகம் உள்ள வேறு ஒரு பொருள் இருக்கிறது என்று புதிதாகக் கண்டுபிடித்துவிட்டால், இந்தச் சமன்பாட்டின் அடிப்படையே நிலநடுக்கம் வந்ததுபோல் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். அப்படி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டார்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில். ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது இஉதச என்ற 20 நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (உன்ழ்ர்ல்ங்ஹய் ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய் ச்ர்ழ் சன்ஸ்ரீப்ங்ஹழ் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட்). இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஒளியை விட திசை வேகம் உள்ள பொருளாக நியூட்ரினோ எனும் மிக மிக எடை குறைந்த அணுத்துகளைக் குறிப்பிட்டது. இந்த அணுத்துகள் ஏதோ இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள். இதை 1936 ஆம் ஆண்டே உல்ஃப்காங் பெüலி என்ற அறிவியலறிஞர் கண்டுபிடித்துவிட்டார். அணுக்கரு வினை நடக்கும்போது அதிக வெப்பநிலையில் நியூட்ரினோ அணுத்துகள் உருவாகிறது. உதாரணமாக 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூரியனில் ஹைட்ரஜனும், நைட்ரஜனும் சேரும்போது, ஹீலியமும் நியூட்ரினோவும் வெளிப்படுகின்றன. இந்த இஉதச நிறுவனம் செய்தது எல்லாம் நியூட்ரினோ அணுத்துகள் ஒளியைவிட அதிக வேகமாகச் செல்லக் கூடியது என்பதைக் கண்டுபிடித்ததுதான். எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்று கேட்கிறீர்களா? ஜெனீவாவில் உள்ள இஉதச ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கப்படும் நடந என்ற இயந்திரத்தில் உருவாக்கப்படும் நியூட்ரினோ அணுத்துகளை அங்கிருந்து 730 கி.மீ. தொலைவில் இத்தாலியில் கிரான்சாúஸô நகரில் அமைந்துள்ள கசஎந ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பினார்கள். இந்த அணுத்துகளை அனுப்பும் பாதை எல்லாம் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்தது. அப்படி அனுப்பியபோது ஒளியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் சென்று 60.7 நானோ செகண்ட் முன்னதாகச் சென்று கசஎந இல் உள்ள ஞடஉதஅ ஈங்ற்ங்ஸ்ரீற்ர்ழ் ஐ அடைந்தது. அதாவது ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 29,97,92, 458 மீட்டர். நியூட்ரினோவின் வேகம் விநாடிக்கு 29,97,98,454 மீட்டர். இந்தச் சோதனையை 2009-2011 ஆண்டுவரை ஒரு தடவையல்ல, 16 ஆயிரம் தடவை செய்து பார்த்துவிட்டார்கள். அதற்கப்புறம்தான் இதை அறிவித்தார்கள். இதிலிருந்து ஐன்ஸ்டீனின் கோட்பாடு இனியும் செல்லுபடியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூட்டனின் இயக்கவிதிகளில் இருந்து மாறுபட்டவை ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள். என்றாலும், நமது அன்றாட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் நாம் பயன்படுத்தும் சாதாரண வேகத்தில் இன்றும் செல்லுபடியாகக் கூடியவை நியூட்டனின் இயக்கவிதிகள். அதிக வேகங்களில்தான் அவை செல்லுபடியாகாமல் போய்விடுகின்றன. அதுபோல ஐன்ஸ்டீனின் விதிகளில் ஒளியின் திசை வேகம் தொடர்பான சிலவற்றை மட்டும் நிராகரித்துவிட்டு அறிவியல் மேலும் வளரவே, நியூட்ரினோ அணுத்துகள் ஒளியை விட அதிக திசை வேகம் கொண்டது என்ற கண்டுபிடிப்பும் உதவும்'' என்றார். - ந.ஜீவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக