"கேள்வி ஞானத்தால் வாசித்தேன்!'
ஒன்றரை அடியில், வடிவமைக்கப்பட்ட வீணையைக் கொண் டு, உலகம் முழுக்க கச்சேரி நடத்தும் ரங்கராஜன்: பள்ளியில் படிக்கும் போது, பிரபல வீணை வித்வான்கள் ஈமணி சங்கர சாஸ்திரி, சிட்டிபாபு போன்றோரின் கச்சேரிகளுக்குச் சென்று, அவர்கள் வாசிக்கும் போது, ஆர்வமாக கவனிப்பது என் வழக்கம். கடந்த, 1979ல், எனக்கு, 20 வயதாக இருக்கும் போது, வீட்டிற்கு அருகில் உள்ள, ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், மயூரவள்ளி தாயாருக்கு, சரஸ்வதி அலங்காரம் நடந்தது. மறுநாள் அந்த அலங்காரப் பொருட்களில், சரஸ்வதியின் கையிலிருந்த ஒன்றரை அடி பொம்மை வீணையை, என் கைகளில் கொடுத்த வீரராகவப் பட்டாச்சாரியார், அதை வாசிக்க கூறினார். நானும், எனக்குள்ள இசையின் கேள்வி ஞானத்திலேயே, அந்த வீணையை வாங்கி, வாசிக்க ஆரம்பித்தேன். சிறப்பு வாய்ந்த அந்த வீணை, தஞ்சையில் வீணைகள் தயாராகும் பலா மரத்தில் வடிவமைக்கப்பட்டது. அதில், 24 ஸ்வரங்களையும் அமைத்து, தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். வீணை வித்வான்கள், சிட்டிபாபு, பாலசந்தர், காயத்ரி போன்றோர் முன்னிலையில், வாசித்து காட்டி, அவர்களின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா, என் வீணை இசையின் தீவிர ரசிகர். என் கச்சேரியை பாராட்டி இருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா உட்பட, இதுவரை, உலகம் முழுக்க, 1,000 மேடைக் கச்சேரிகளை நிகழ்த்தி இருக்கிறேன்; வீணை தவிர, சித்தார், சந்தூரியையும் வாசிப்பேன். என் இசையில் சில ஆல்பங்கள் வந்துள்ளன. சரஸ்வதியின் மடியிலிருந்த வீணை, எனக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்ததாலோ என்னவோ, இசையில் என்னால் பல சாதனைகளை செய்ய முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக