சொல்கிறார்கள்
தமிழகத்தில் முதன் முதலில் சுயநிதிக் கல்லூரியை துவங்கிய ஜெயலட்சுமி: எம்.ஏ., பட்டதாரியான நான், ஒரு ஆங்கில வழி கல்விப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த காலகட்டங்களில், மெட்ரிக் பள்ளி என்பதில் பெற்றோருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. வீடு வீடாகச் சென்று பெற்றோருக்கு எடுத்துச் சொல்லி, நான் ஆரம்பித்த பள்ளியில் குழந்தைகளை சேர்த்தேன். ஆயா, டிரைவர், ஆசிரியை, காவலாளி என அனைத்துமே நான் தான்.என் உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசாக, இன்று என் அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒரு தரம் வாய்ந்த பள்ளியாக விரிந்து, அதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இதே போல், சுயநிதிக் கல்லூரியை துவங்க நினைத்தேன். சுயநிதிக் கல்லூரி தேவையில்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். ஆண்டில் 365 நாளில் 300 நாட்கள் கோர்ட்டிற்கும், பாரதியார் பல்கலைக் கழகத்திற்குமாக அலைந்து திரிந்தேன். பலத்த போராட்டங்களுக்குப் பின், கல்லூரி துவங்க அனுமதி கிடைத்தது; அம்மன் கல்லூரி உருவானது. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல உதவிகள் பெற்று, படிக்கின்றனர். பிளஸ் 2வில் 1,000க்கும் அதிகமான மதிப்பெண் பெறுபவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் இலவசம். "ஈரோட்டின் இரும்பு மனுஷி', பல பொதுச் சேவை நிறுவனங்கள் வழங்கிய, "சிறந்த சமூக சேவகி' விருது என, பல விருதுகள் பெற்றுள்ளேன். கல்லூரி காலம் என்பது ஒரு உற்சாகமான காலம் தான். ஆனால், எந்தக் காரணத்தாலும், படிப்பை கோட்டை விடக்கூடாது. உலக அளவு, போட்டி மனப்பான்மையும், கண்ணோட்டமும், அனைத்து விஷயங்களிலும் கல்லூரியிலிருந்தே அத்துப்படியாக வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில் தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக