செவ்வாய், 31 ஜனவரி, 2012

Puranaanuuru in English : ஆங்கிலத்தில் புறநானூறு நூல்திருவனந்தபுரத்தில் வெளியீடு

திருவனந்தபுரம்:சங்க இலக்கியத்தில் பெருமை பெற்ற புறநானூறு பாடல்கள் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள திராவிட மொழியியல் சர்வதேச பள்ளியில் உள்ள டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அரங்கில், இந்த நூல் வெளியீட்டு விழா நடந்தது.கேரள விவசாய பல்கலை முன்னாள் துணைவேந்தரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான டி.மாதவ மேனன் புறநானூறு இலக்கியத்தை ஆங்கிலத்தில் உரிய விளக்கங்களுடன் அழகாக உருவாக்கியுள்ளார். இந்த நூலை "தினமலர்' ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இந்த நூலின் முதல் பிரதியை ஹாலந்தில் உள்ள லீடன் பல்கலைக்கழக மொழியியல் அறிஞர் டாக்டர் ஏ.ஜி.மேனன் பெற்றுக் கொண்டார்.விழாவிற்கு, டாக்டர் புதுச்சேரி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் எம்.ராமா, டாக்டர் என்.பி.உன்னி, டாக்டர் சியாமளா, டாக்டர் ஜி.கே.பணிக்கர் மற்றும் பேராசிரியர் டி.பி.சங்கரன் குட்டி ஆகியோர் நூலின் சிறப்பை பற்றி பேசினர்.இவ்விழாவில் பேசிய நாணயவியல் அறிஞர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ""திராவிட மொழியியல் அமைப்பு மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் நிறைவேற்றிட அரசை சார்ந்திருப்பதை விட தனி நபர்களை சார்ந்திருக்கும் வகையில் அமைய வேண்டும்'' என்று வலியுறுத்தினார். முன்னதாக டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவிடத்தில், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக