திங்கள், 23 ஜனவரி, 2012

Where is Abdul kalam? SL Naval attacked thamizh fishermen. எங்கே அப்துல் கலாம்?

மாய வித்தை செய்யப் போவதாகச் சிங்களக் கொடுங்கோலர்களைச் சந்திக்க இலங்கைக்குப் புறப்பட்டுச்சென்ற அப்துல்கலாம் அங்கேதானே இருக்கிறார். அவருக்கான விடைதானே இக்காட்சி. இதனைக் கண்டு களித்தாரா? முகம் சுளித்தாரா? வெட்கப்பட்டு அங்கேயே தங்கிவிடுவாரா?  அல்லது தமிழ்நாடு வராமல் புதுதில்லி சென்று விடுவாரா? தமிழர் நலன்சார்ந்து செயல்பட்டால் உலகமே அவரைப் போற்றி வணங்கும் என உணர்ந்து திருந்துவாரா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


 
இராமேசுவரம் மீனவர்கள் மீது 
இலங்கைக் கடற்படை தாக்குதல்

First Published : 23 Jan 2012 02:37:28 AM IST


ராமேசுவரம், ஜன. 22: நடுக்கடலில் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல் வீசித் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயமடைந்தார். 4 பேர் சிறைப் பிடிக்கப்பட்டனர்.  ராமேசுவரத்தில் இருந்து ஜனவரி 21-ம் தேதி சுமார் 680 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்திய, இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். அதன்படி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் ராமேசுவரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான படகில் இருந்த மீனவர்கள் ஜெகதீஷ் (30), பாண்டி, செந்தூரான், வெற்றிவேல். ராமமூர்த்தி ஆகிய 5 பேர் மீது கல் வீசித் தாக்கியுள்ளனர். இதனால் மீனவர்கள் படகினுள் மறைந்து கொண்டனர். இருப்பினும் மீனவர் ஜெகதீஷ் வலது காலில் கல் பட்டு காயம் ஏற்பட்டது.  மேலும் ராமேசுவரத்தைச் சேர்ந்த போஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சின்னையன், செல்வராஜ், தமிழ்செல்வன், மலைச்சாமி ஆகிய 4 மீனவர்களையும், அந்தப் படகையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.  இந்த மீனவர்களை இலங்கை போலீஸôரிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இலங்கை கடற்படையினர் ஒப்படைக்காமல், அவர்களது பாதுகாப்பில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் கல்வீச்சில் காயமடைந்த மீனவர் ஜெகதீஷ், ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றார்.  4 மீனவர்கள் மாயம் : ராமேசுவரத்தைச் சேர்ந்த ராமு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ராமு, ராஜமாணிக்கம், பாக்கியம் ஜோசப், பாண்டி, மாரியப்பன் ஆகிய 5 மீனவர்களும் ஜனவரி 21-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர்.  இவர்கள் மீன்பிடித்து விட்டு மறுநாள் (ஜனவரி 22) காலை கரை திரும்ப வேண்டும். ஆனால் மீனவர்கள் 5 பேரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கரை திரும்பவில்லை. இதனையடுத்து காணாமல் போன மீனவர்களைத் தேடி, மீட்புக் குழு மீனவர்கள் மற்றொரு படகில் கடலுக்குச் சென்றுள்ளனர்.  மீனவர்கள் காணாமல் போனது குறித்து மீன்வளத் துறை இயக்குநருக்கு ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் வீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக