| More options Jan 9, 10:49 pm |
இந்திய முன்னாள் உயர்ஸ்தானிகர் ஜீ.பார்த்தசாரதி
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 03:01.56 PM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சிறந்த போராட்ட இயக்கங்களில் ஒன்று எனவும்
அதன் தலைவர் வே.பிரபாகரனின் சொல்லுக்கு கூடுதல் மதிப்பு அளிக்கப்பட்டது என
இந்திய முன்னாள் உயர் அலுவலர் ஜீ.பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார்.
மரபு ரீதியான இராணுவமொன்றுடன் மரபு ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டதே தமிழீழ
விடுதலைப்புலிகள் இழைத்த மாபெரும் தவறு என ஜீ.பார்த்தசாரதி
சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில்
இந்தியாவின் அரசியல் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் தமிழர்களை
பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவது அவசியமானது என்றும் கைத்தொழில் மற்றும்
பொறியியல் நிறுவனங்களை வடக்கு கிழக்கில் நிறுவுவதன் மூலம் பாரியளவில்
மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக