ஞாயிறு, 8 ஜனவரி, 2012

dinamalar about chocolate: சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லாவண்யா: நான் எம்.பி.ஏ., முடிச்சதும் திருமணம் ஆகிவிட்டது. சமையலில் ஆர்வம் உள்ள நான், ஒருமுறை என் தோழி கூறிய சாக்லெட் ரெசிபியை முயற்சி செய்தேன். நன்றாக இருந்தது. ஒரு முறை குடும்பத்துடன் மும்பை சென்ற போது, அங்கு சாக்லெட் கோர்ஸ் ஒன்று முடித்தேன்.அதில் கிடைத்த நம்பிக்கை, ஆர்வம் என்ற அளவைத் தாண்டி, சாக்லெட் ஒரு தொழிலாகவே யோசிக்க வைத்தது.ஊர் திரும்பியதும், வீட்டில் ஐந்து கிலோ சாக்லெட் செய்தேன். என் கைப்பக்குவத்தை பாராட்டிய கணவரின் அலுவலகத்திற்கு, சாக்லெட்டை கொடுத்து விட்டேன். அனைத்தும் விற்பனையானது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன். இன்னும் விதவிதமாக சாக்லெட் தயார் செய்தேன். ஆரம்பித்த மூன்றாவது நாளிலேயே, "கி÷ஷார் சாக்கோஸ்' என்று, என் மகன் பெயரில் துவங்கினேன். சாக்லெட் செய்வதில் பல சவால்கள் இருக்கு, கொஞ்சம் பிசகினாலும், சுவையும், கவர்ச்சியும் போய்விடும். விசேஷ தினங்களில் தான் சாக்லெட் விற்பனை சிறப்பாக இருக்கும்.மற்ற நாளில் நஷ்டப்படாமல் இருக்க வேண்டுமானால், கொஞ்சம் மெனக்கெடணும்; ஒவ்வொரு பொருட்காட்சியாக தேடிப் போய் ஸ்டால் போட்டேன்.ஆர்வத்தில் ஆரம்பித்த பிசினஸ், இன்று, சீசன் நேரங்களில் மட்டும் குறைந்தது, 25 பேருக்கு வேலை கொடுக்கிறேன்; மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அதிக ஆர்டர்கள் குவியும் போது, இன்னும் ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். சாக்லெட் செய்ய கற்றுக் கொடுக்கும் பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறேன்!

"பாரம்பரியத்தைப் பின்பற்றுவோம்!'
 சித்த மருத்துவர் முத்துகுமார்: தமிழர்களின் கலாசாரத்துடன் கருப்பட்டிக்கும், சர்க்கரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கருப்பட்டி உடலுக்கு வலிமையையும், குளிர்ச்சியையும் தரும். அன்றாட உணவில், கருப்பட்டியைச் சேர்த்துக் கொண்டால், எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, கருப்பைக் கோளாறு, தசைப்பிடிப்பு, பல் சம்பந்தமான நோய்கள் அண்டாது. காரணம், கருப்பட்டியில் உள்ள கால்சியம்.கருப்பட்டி கலந்த எள்ளுருண்டையை குழந்தைகளுக்குத் தயார் செய்து கொடுக்கலாம். இது ருசியாக இருப்பதுடன், சாக்லெட் சாப்பிடுவதால், ஏற்படும் பல் சொத்தை போன்ற எந்தத் தொந்தரவையும் தராது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், அவர்களின் இடுப்பிற்கும், கருப்பைக்கும் நல்லது.குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுக்கு, மிளகு, கடுகு, வெந்தயம், ஓமம் உட்பட, 11 மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளுடன், கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாவதுடன் கருப்பைக்கும் நல்லது.சர்க்கரையும் அற்புதமான மருந்து தான். வாந்தி, பித்தம், நாக்கு சுவையின்மை இவற்றைப் போக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கும், சளியைப் போக்குவதற்கும் பாரம்பரியமாகவே, தமிழர்கள் சர்க்கரைப் பாகைத்தான் பயன்படுத்துகின்றனர். சர்க்கரைக்கே இவ்வளவு சத்து இருக்கும் போது, அதன் மூலப் பொருளான கரும்பில் எவ்வளவு இருக்கும்.தொடர்ச்சியாக விக்கல் உள்ளவர்களுக்கு மூன்று சொட்டு கரும்புச் சாறைக் கொடுத்தால், விக்கல் நின்று விடும். மஞ்சள் காமாலை நோய் வந்தவர்கள் கரும்புச் சாறு குடித்தால், உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக