இந்தியாவின் குரல் கண்டிப்பாக மனித உரிமைக்குழுக் கூட்டத்தில் எழும்பும்- சிங்களர்களுக்கு ஆதராவாக! இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு ஆதரவாக! தங்கள் கட்டளையை நிறைவேற்றிய சிங்களர்களைப் பாராட்டுவதற்காக! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
திருநெல்வேலி:ஐ.நா.,சபை மனித உரிமை குழுவில் இலங்கை தமிழர் பிரச்னை விவாதிக்கப்படும் போது,தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இலங்கை எம்.பி.,சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.இலங்கையை சேர்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.,யான சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழகம் வந்துள்ளார்.அவர் நெல்லையில் இரவு நிருபர்களிடம் கூறியதாவது: முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அரசியல் பிரச்னையை மக்கள் பிரச்னையாக்குவதால் இரு தரப்பு மோதல்கள் ஏற்படுகின்றன. தமிழக சிவசேனா கட்சியினர் இருமாநில மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக நல்லிணக்க பேரணியை நடத்தினர். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலும்நடந்த பேரணியில் பங்கேற்றேன். இலங்கை தமிழர் பிரச்னை தீர்விற்காக தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகும்குரல் கொடுத்துவரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். வரும் மார்ச்சில் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை குழு கூட உள்ளது. அதில் இலங்கை தமிழர் விவகாரம் முக்கிய விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இலங்கையில் வாழ்விழந்து காணப்படும் தமிழர்களுக்கு அதிகார பரவல் உள்ளிட்ட நியாயமான தீர்வுகள் கிடைக்க இந்தியாவின் உதவியை நாடுகிறோம். ஐ.நா.,குழு கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்காக இந்தியா குரல் கொடுக்கவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக