திங்கள், 9 ஜனவரி, 2012

frequence test will damage the dam- warning: அடிக்கடி ஆய்வு செய்தால் அணை பலவீனமாகிவிடும்




கோவை:""பலமாக இருக்கும் அணைப் பகுதியை பல முறை தொடர்ந்து ஆய்வு செய்தால், தானாகவே அணை பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது,'' என, முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றிய பொதுப்பணித் துறை இன்ஜினியர் (ஓய்வு) விஜயகுமார் கூறினார்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த இன்ஜினியர்கள் சங்கம், கோவை கிளை சார்பில், "முல்லைப் பெரியாறு அணை - உண்மை நிலை' என்ற தலைப்பில் கருத்தரங்கு, கோவையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்துக்கு பின், தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த இன்ஜினியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜயகுமார்(ஓய்வு) கூறியதாவது:பலமாக இருக்கும் அணைப் பகுதியை பல முறை தொடர்ந்து ஆய்வு செய்தால், தானாகவே அணை பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அணை குறித்து, "டேம் பிரேக் அனாலிசஸ்' செய்துள்ளேன். இதன்படி அணை உடைந்து தண்ணீர் வெளியேறினால், நிலத்தின் கீழ்மட்டத்தை நோக்கித்தான் பாயும். நிலத்தில் மேல்மட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

அகில இந்திய தமிழர்கள் மற்றும் மலையாளிகள் நல அமைப்பு தலைவர் அனுப் ஆண்டனி, பொதுச் செயலர் வினோத், பொருளாளர் அஜீத்குமார் ஆகியோர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. எங்கள் அமைப்பு சார்பில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். பொங்கல் பண்டிகை முடிந்ததும், கோவையிலுள்ள பல்வேறு மலையாளிகள் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்று, கேரள முதல்வரிடம் மீண்டும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவும், தமிழக முதல்வரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை குறித்த உண்மை நிலையை விளக்கும் வகையில் குறும்படம் திரையிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக