சித்தி எனும் அரக்கியிடம் சிக்கிய குழந்தை : சுற்றிய கிரைண்டர் கல் மீது முகத்தை தேய்த்த கொடூரம்
திருப்பூர்: நான்கு வயது குழந்தை முகத்தை கிரைண்டரில் வைத்து அரைத்த சித்தி கொடுமை, திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர், நல்லூர் பொன்கோவில் நகரில் வசிப்பவர் சரவணன்; மனைவி சங்கீதா. இவர்களின் 4 வயது குழந்தை லோசனி; எல்.கே.ஜி., படிக்கிறார். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், சங்கீதா, திருவண்ணாமலையை அடுத்த ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சரவணன், விஜி என்ற பெண்ணை திருமணம் செய்து, அதே பகுதியில் வசித்து வந்தார். சங்கீதாவுக்கு பிறந்த லோசனியை, விஜி துன்புறுத்தியுள்ளார். இதையறிந்து சங்கீதா குழந்தையை கேட்டார்; சரவணன் கொடுக்கவில்லை. இதன்பின், இருவரும், குழந்தையை அவ்வப்போது துன்புறுத்தினர்.
தகவல் தெரிந்ததும் குழந்தையை மீட்ட, "சேவ்' அமைப்பு தலைவர் ஆலோஷியஸ் கூறியதாவது: சரவணன் வீட்டின் அருகில் இருந்தவர்கள், ஹெல்ப் லைன் 1098க்கு தொடர்பு கொண்டனர். அப்பகுதிக்கு சென்று விசாரித்த போது, குழந்தை மீது துணியை போட்டு அழைத்து வந்த விஜி, "கடந்த வாரம் ஒரு விபத்தில் சிக்கியது. அதனால், முகமெல்லாம் காயமாகியுள்ளது' என்றார். முகத்தை திறந்து காண்பிக்க மறுத்தார். போலீசை அழைப்போம் எனக் கூறியதும், குழந்தையை காண்பித்தார். சிகிச்சைகாக குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். "கோபம் வந்தால், சித்தி, ஓடும் கிரைண்டர் முன் முகம் காட்டுவார். சத்தம் போட்டால், கிரைண்டருக்குள் தூக்கி போட்டு உன்னையும் சேர்த்து அரைத்து விடுவேன் என மிரட்டுவார். இரண்டு, மூன்று முறை ஓடும் கிரைண்டரில் என் முகத்தை வைத்து உரசியுள்ளார். தூங்கி எழுந்ததும், குச்சியை வைத்து என் மூக்கின் உட்பகுதியில் இடித்து விடுவார். இரவில் பழுக்க காய்ச்சிய கம்பியை வைத்து கை, கால், பின்புறம் சூடு போடுவார்' என, மருத்துவமனையில் அழுது கொண்டே குழந்தை தெரிவித்தது. இவ்வாறு ஆலோஷியஸ் கூறினார்.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லோசனியை பார்க்க சென்ற கலெக்டர் மதிவாணன் கூறும் போது, ""வெளியே சொல்ல முடியாத அளவு குழந்தையை கொடுமைப்படுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் புகுந்து கழுத்தை நெரித்து கொன்று விடக்கூடும். எனவே, தனியார் மருத்துவமனையிலோ, "சேவ்' அமைப்பு பாதுகாப்பிலோ வைத்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்,'' என்றார். இச்சம்பவத்தையடுத்து, சரவணன், விஜி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக