திருடியவர் சிங்களர் என்ற உண்மையைச் சொல்லக்கூடாதா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
First Published : 03 Jan 2012 04:35:30 PM IST
ஆலந்தூர், ஜன.3: சென்னை விமானநிலையத்தில் அமெரிக்கா செல்வதற்காக வந்த அம்பத்தூரைச் சேர்ந்த இன்ஜினியரிடம் திருடிய இலங்கை மிளகு வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அம்பத்தூரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (35). இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு அம்பத்தூர் வந்த இவர் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முடிவு செய்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தார். அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அவர் துபாய் விமானத்தில் ஏற கைப்பையுடன் தயாராக நின்று கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து கைப்பையை திறந்து பார்த்தார். அதில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள டாலர்கள் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். அப்போது வெங்கட்ராமன் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு பயணி கைப்பையை திறந்து பணம் திருடுவது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை தலைநகர் கொழும்புவைச் சேர்ந்த மிளகு வியாபாரி பெர்னாண்டோ வார்னே குலகரி என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் பணத்தை மீட்டு வெங்கட்ராமனிடம் ஒப்படைத்தனர். பெர்னாண்டோ வார்னேயிடம் விமான நிலைய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக