செவ்வாய், 15 நவம்பர், 2011

மூளைச்சாவு ஏற்பட்ட ஆசிரியை கண்கள் தானம்





மதுரை:மதுரை அருகே தேர்தல் பணியின்போது, விபத்துக்குள்ளாகி, மூளைச்சாவு ஏற்பட்ட ஆசிரியையின் உடல் உறுப்புகள், தானம் கொடுக்க முடியாத நிலையில், கண்கள் தானம் செய்யப்பட்டன.

மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் பத்மநாபன்; பலசரக்கு கடை நடத்துகிறார். இவரது மனைவி மணிமொழி, 42; உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி ஆசிரியை. ஒரு மகன், ஒரு மகள் உண்டு. இரண்டாம் கட்ட உ<ள்ளாட்சித் தேர்தல்(அக்., 19) பணிக்காக, அக்., 18ல், உத்தப்புரம் கச்சப்பட்டி சென்றார். இரவு சாப்பிட, நண்பரின் டூவீலரில் உத்தப்புரம் சென்றார். டூவீலர் விபத்துக்குள்ளானதில், தவறி விழுந்த மணிமொழி, கோமா நிலையை அடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்தும், முன்னேற்றமில்லை. கலெக்டர் சகாயம் அறிவுரையின்படி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று மூளைச்சாவு ஏற்பட்ட மணிமொழியின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர். ஆனால், "அது காலம் கடந்த முடிவு. தானமாக பெறும் வகையில் உறுப்புகள் இல்லை' என, டாக்டர்கள் கூறினர். இதைதொடர்ந்து, அவரது கண்கள் மட்டும் தானமாக பெறப்பட்டன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக