வெள்ளி, 18 நவம்பர், 2011

வியாழன் கிரகத்தில் தண்ணீர்” நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


 
“வியாழன் கிரகத்தில் தண்ணீர்” நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வாஷிங்டன், நவ.18-
 
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன், இங்கு பல சந்திரன்கள் உள்ளன. எனவே, வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது.
 
அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர். இந்த நிலையில், வியாழன் கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. “யூரோப்பா”வில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன.
 
அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி தெரிவித்துள்ளார். 
 
 
Friday, November 18,2011 03:34 PM, வீட்டுகுருவி said:
நல்ல வேல அங்க பெட்ரோல் இருப்பதுபோல் கண்டுபிடிக்கலா...இப்போதைக்கு வியாழன் தப்பிச்சது
Friday, November 18,2011 02:52 PM, Raja said:
இது ஒரு நல்லகண்டுபிடிப்புதன் ஆனால் இந்த பயங்கரவாத செயல்களை இவுலகில் நடத்தும் அமெரிக்கா அங்கேயும் சென்று தாக்குதல் நடத்தி அனைத்தையும் அளித்து நாசமாக்கி விடுவார்கள் இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
On Friday, November 18,2011 02:54 PM, Aswin said :
ஆமாம் இது சரியான செய்திதான்
Friday, November 18,2011 02:51 PM, விஜயகாந்த் said:
அய்யா........இந்த தகவல் தந்த உங்களுக்கு எங்கள் கரிமேட்டு கருவாயன் நற்பணி மன்றம் சார்பாக நன்றி தெரிவித்துகொள்கிறோம்........ஏன் என்றல் வர வர எங்கள் அய்யாவுக்கு உள்ளூர் தண்ணி ஒத்துகொள்வதில்லை...அதனால் ஒரு மாற்றத்துக்கு “வியாழன் கிரகத்து தண்ணீர்” குடித்து பார்க்கலாம் என்று ஒரு ஆர்வ கோளாறு........."மாத்தி யோசி".......வாழ்க நாசா.......வளர்க எங்கள் கேப்டன் விஜயகாந்த்...
On Friday, November 18,2011 03:14 PM, sathriyan said :
எங்கள் தானை தலைவன் மாண்புமிகு நரசிம்மாவை தரக்குறைவாக பேச அனுமதிக்க மாட்டோம் . இப்படிக்கு கரிமேடு கரிவாயன் கள்
Friday, November 18,2011 02:33 PM, kusumban said:
நல்ல முயற்சி.௨௨ எஅர்ஸ் இதற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக