புதன், 3 பிப்ரவரி, 2010

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் கதி என்ன?: இலங்கை அரசு மீது புகார்



வாஷிங்டன், ​​ பிப்.​ 2: இலங்கையில் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவலையும் இலங்கை அரசு வெளியிட மறுத்து வருகிறது.​ அவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான "ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச்' புகார் கூறியுள்ளது.11 ஆயிரம் தமிழ் இளைஞர்களை நீண்ட நாள்களாக மோசமான சிறைகளில் அடைத்து துன்புறுத்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்களைப் பற்றி விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.​ இந்த விஷயத்தில் இலங்கை அரசு எல்லாவற்றையும் மூடி மறைப்பதால் அவர்களின் கதி குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆதம்ஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக 30 பக்க அறிக்கையை அந்த அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது.​ மனித உரிமை ஆர்வலர்கள்,​​ மனித உரிமை அமைப்பின் ஊழியர்கள்,​​ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்கள் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.மனித உரிமைகளை மீறுவதை இலங்கை அரசு வாடிக்கையாகவே கொண்டுள்ளது.​ குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.​ அவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு வருவதாக பரவலாக புகார் உள்ளது.அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.​ அவர்களில் பலரைக் காணவில்லை.​ அவர்களது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோன்று காணாமல் போனவர்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தமிழர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தாலும் இலங்கை அரசு இதை பொருட்படுத்துவதில்லை.
கருத்துக்கள்

தமிழர்கள் ஒன்றுபட்டுக் கிளர்ந்து எழுந்தால்தான் இந்தியக் கொலைக் கரங்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நீளாமலும் சிங்களத்திற்குக் கேடயமாக மாறாமலும் இருக்கும். அப்பொழுதுதான் பிற நாடுகள் தயக்கமின்றி உண்மையின் பக்கம் இருக்கும்.நாமோ பிளவுபட்டுக் கிடக்கின்றோம். பதவி நலன்களுக்காக மத்தியக் கட்சிக்குக் காவடி தூக்க எப்பொழுதுமே ஒரு கூட்டம் அணியமாக உள்ளது. திண்ணை எப்பொழுது காலியாகும் என மற்றோர் கூட்டம் அதனைச் சுமக்கத்தான் காத்திருக்கின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரசு இன்னும் மீள முடியாமல் இருப்பதையும் அண்ணா வழிவந்தவர்கள் அவரது கொள்கையின்படி எதிராக இருக்க வேண்டிய கடமையையும் திராவிடக் கட்சிகள் மறந்து விடுகின்றன. பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்றாவது அவை மாறாவிட்டாலும் அவற்றின் தொண்டர்கள் மனம் மாறி இன நலம் பேண உறுதி எடுக்க வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழுக்காக ஒன்றுபட வேண்டும். ஈழத் தமிழர்களுக்குக் கேடயமாகவும் வாளாகவும் மாற வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற கொடுமைகள் நிற்கும். வெல்க தமிழ் ஈழம்! வாழ்க ஈழ-இந்திய நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/3/2010 2:26:00 AM

Bull shit. LTTE had placed FULL faith on US and Europe ....NOT India. Then why expect India to come to rescue ? After killing Rajiv was prabhakaran foolish enough to expect "help" from India. Truth is US and Europe were IMPOTENT

By shivling
2/3/2010 2:25:00 AM

THE WORLD KEPT QUIET WHEN THE SINGALAVA REGIME WITH HELP OF CHINA, UNION INDIAN GOVT AND OTHER REGIMES, CARRIED OUT THE TAMIL ETHINIC CLEANSING. EXPECT THE NOBLE TAMIL HEARTS NO ONE EVEN SHED TEARS FOR THOSE SOULS BUTHERED BY THE SINGALAVA DOGS. ALL KEPT MUM AND NOW " HUMAN RIGHTS WATCH" PRETENDS TO WEEP FOR THE PEOPLE HELD IN THE BARBARIC CAMPS. THIS IS A POLITICAL STUNT RATHER THAN A REAL INTEREST. US GOVT GIVES PRESSURE TO THE SINGALAVA GOVT VIA HUMAN RIGHTS WATCH TO ACCEPT THEIR TERMS.

By Paris EJILAN
2/3/2010 1:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக