வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

Important incidents and happenings in and around the world

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டதால், தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்திவிட்டு, பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்து மீண்டும் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் கடற்படையினர் தாக்குதலை துவக்கியுள்ளனர்.



ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 6 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து, வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.மீனவர்களை தாக்கி, அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு, விரட்டியடித்துள்ளனர்.



ஜோசப், சேகர், சேசு உட்பட 20க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன் பிடிக்காமல் நள்ளிரவிலேயே ராமேஸ்வரம் திரும்பினர்.இதனிடையே, இரவு முழுவதும் நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்ததை தூரத்திலிருந்து இலங்கை கடற்படையினர் கண்காணித்ததாக, நேற்று கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். இலங்கை தேர்தலில் ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை ராமேஸ்வரம் மீனவர்கள் இனி தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும், என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
Has it any thing to do with Sethusamudram project ?
Or Is India made to realise its stature in this region , to the satisfaction of US ?
by RVS sharma`,Ras al Khaimah,United Arab Emirates 01-02-2010 21:50:11 IST
நாமளும்...அந்த மீனவன் உழைப்பில் வந்த மீனை நல்ல மொத்திட்டு..இப்படி சொரணை இல்லாம கையலகதனமா இருக்கோமே ன்னு நினைக்கும் போது நம்ம பொறப்பே வேஸ்ட் ன்னு தோணுது... இப்படிக்கு கையாலகாத தமிழனுள் ஒருவன்...
by S Zainul,Jubail,Saudi Arabia 01-02-2010 19:42:57 IST
you are right Mr. Thiruvalluvan
by DR. Gokhul,New Delhi,India 01-02-2010 19:15:46 IST
இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்களை அழிப்பது சிங்கள அரசு. ஆதரிப்பது மத்திய அரசு. இதை பற்றிய கவலை ஏதும் இன்றி, விழாக்கள் நடத்தி தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொள்வது கின்னஸ் சாதனை இரண்டு மணி நேர உண்ணாவிரத புரட்சி நடத்திய கலைஞர் அரசு. சாகச் செய்பவனை, சாகச் செய்யாமல் சாகின்றாய் தமிழா என்ற பாரதிதாசன் பாடல் உண்மையாக உரைக்கிறது.
by சார்லஸ் ,Raameswaram,India 01-02-2010 18:01:42 IST
திருவள்ளுவன், நீங்கள் சொல்வது மிகவும் சரி...
by Gee Dinesh,Chennai,India 01-02-2010 15:32:55 IST
அருமையான செயல் ! அபாரம்.

பேசி என்ன பிரயோஜனம் ... தேர்தல்னு வந்தால் நாம தமிழ் துரோக கட்சிக்கு தான் காசு வாங்கிட்டு ஓட்டு போட போறோம் .
by mr tamilan,singapore,India 01-02-2010 15:31:52 IST
தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதல்வராக இருந்தும், இந்தியாவில் ஒரு தமிழன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் தமிழனுக்கு பயன் இல்லை.
by தஞ்சாவூர் krishna,Doha qatar,India 01-02-2010 15:12:13 IST
இது நம்ம நாட்டின் கையாலாகாத தன்மை, இதில வல்லரசு என்று பீத்தல்
வேறு, ஒரு அடி கொடுத்தால் அவன் அடங்குவான், இந்த லச்சனதில் போனா சைனா நம்மளை பிடிப்பான் ,
அப்பவும் நம்ம நாடு, ஒன்னும் பண்ணாது, சிரிச்சிகிட்டே இருக்கும், எனக்கு நண்பர் திருவள்ளுவன் மாதிரி
விளக்கமா எழுத தெரியாது ,,,,
தப்ப நினைக்காதீங்க
by pma kaja,Dammam,India 01-02-2010 14:10:29 IST
kind attention siva sankar menon and karunanidhi
by r ramamurthi,dubai,India 01-02-2010 13:17:38 IST
திருவள்ளுவனின் கூற்று அனைத்தும் சரியே.....
by A Rakah Dus,Trichy,India 01-02-2010 13:04:53 IST
இதை படிக்கும் பொழுது நெஞ்சு குமுறுகிறது -
மிக சரியாக சொன்னார் இலக்குவனார் திருவள்ளுவன் - மீனவர்களின் வாழ்வாதார உரிமையை மீட்பது எந்நாளோ ?? தமிழன் கலம் செலுத்தி கடல் கடந்த நாடுகளை வென்றான் ஒருகாலத்தில்!! இன்று வயிற்று பிழைப்புக்கு மீன் பிடிக்கவும் இயலாவண்ணம் சூழ்நிலை
by மணிகண்டன் பிள்ளை ,Bangalore,India 01-02-2010 12:37:42 IST
இலக்குவனாரின் கருத்து மிக சரியானது. இந்தியா ஒருபோதும் நம்மை அதன் குடிமக்களாக நினைத்தது கிடையாது. நாம் தான் ஒருமைப்பாடு என்று வாய் கிழிய பேசிக்கொண்டு இருக்கிறோம் .
by s vetri,chennai,India 01-02-2010 10:42:57 IST
இது ஒன்றும் புதிதோ அல்லது எதிர்பராததுவோ அல்லது ஆச்சர்ய பட தக்கதோ அல்லது அதிர்ச்சியோ அல்ல!!! ஆண்மை என்பது சிறிதும் இல்லாத அரசு, தங்களது கட்சிக்கு மத்தியில் மந்திரி பதவியில் மட்டுமே ஆர்வம் உள்ள ஒரு அரசு தமிழகத்தில் இருக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்றுகொண்டேதான் இருக்கும்.
==========திருநெல்வேலி அரங்கநாத கிருஷ்ணன்.
by TRK தி.அர.கிருஷ்ணன் ,MYLAPORE==CHENNAI==4,India 01-02-2010 10:19:59 IST
திருவள்ளுவன் நீங்க சொன்னது மிகவும் சரி. ஆனால் ஒன்று கூட உண்டு. அது இந்தியா இப்போது இத்தாலியன் கையில்.
by R.S. Master,kanyakumari,India 01-02-2010 10:17:46 IST
அய்யா இலக்குவனார், ஆறு காரணங்கள் மட்டும்தான் உங்கள் மனதில் உதித்ததோ? ஆறுமே மத்திய அரசு சம்மந்தப்பட்டது தானா? தாங்கள் சிங்ககள அபிமானியோ எனதோன்றுகிறது. விளக்கவும்!
by Mr ராஜ்,Washington,United States 01-02-2010 07:31:30 IST
I am just wondering, if Indian Govt. continue ignoring Tamil fisherman, there are chances that few fisherman follow LTTE style sucide attacts. Freedomfighters/Revolutionist/Lierators/Torroist are not born, they were made
by S Guna,Sydney,Australia 01-02-2010 06:54:18 IST
ரொம்ம நல்லது. கீப் இட் அப். இப்போதாவது தமிழ்நாட்டு மரமண்டைகளுக்கு புத்தி வருதா பார்போம்.
by V புலி ,vannai,Sri Lanka 01-02-2010 06:26:15 IST
இந்தத் துயரங்கள் தொடர்வதற்கு 6 காரணங்கள்தாம் இருக்க முடியும். 1.) தமிழர்கள் இந்தியக் கூட்டமைப்பில இல்லை என்ற உறுதியான நம்பிக்ககை மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 2.) தனனுடைய ஏவலைத்தான் சிங்களப்படையினர் செய்கிறார்கள் என்ற மன நிறைவு மததிய அரசிற்கு இருக்க வேண்டும். 3.) தான் என்ன செய்தாலும் வெத்துவேட்டுத் தமிழக அரசு ஒன்றும் சொல்லாது; எதுவும் செய்யாது என்ற உறுதிப்பாடு மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 4.) தமிழ் நாட்டில் சிறுபான்மையராக ஆகிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மேலும் இல்லாதொழிப்பதையே மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். 5.) இன உணர்வும் மனித நேயமும் அற்ற தமிழர்களை அழிக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தனி யரசு ஒன்றும் இல்லையே என்ற துணிச்சல் மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 6.)எப்பொழுதாவது வீராவேசமாகப் பேசினாலும் எப்பொழுதும் தமிழ மக்கள் கொத்தடிமைகளே என்ற பட்டறிவு தந்த பாடத்தை நன்கு படித்திருக்க வேண்டும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

by I. Thiruvalluvan,Chennai,India 01-02-2010 03:19:50 IST


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக