அழை-வாழ்வியல் மருத்துவப்பயிற்சி : azhai_vaazhiviyalmaruthuvam_payirchi

குறிப்புகள்:
1. வாழ்வியல் மருத்துவம் என்பது, மரபுவழிப்பட்ட வாழ்க்கை முறையை அடித்தளமாகக் கொண்டது. உணவுப் பழக்கங்கள் இம்முறையில் இன்றியமையாதவை.
2. புதிய மருத்துவ முறைகளில் கூறப்படும் நோய்களைக் குணப்படுத்துகிறோம் என்ற பேரில் மூலிகைகளையும் வேறு மருந்துகளையும் பரிந்துரைக்கும் வழக்கம் பல்வேறு மாற்று மருத்துவமுறைகளில் உள்ளது. வாழ்வியல் மருத்துவம் இம்முறையை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, புதிய மருத்துவத்தின் ஆய்வுகளை வைத்து, உடலை அணுக விரும்புவோருக்கு இம்முறை பொருந்தாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
3. மருந்துகள் இல்லாமல் வாழ விரும்புவோருக்கும், புதிய மருத்துவ முறைகள் வேண்டா என உண்மையிலேயே விரும்புவோருக்கும் வழிகாட்டும் மரபு முறையாகத்தான் வாழ்வியல் மருத்துவம் செயல்படுகிறது.
4. வாழ்வியல் மருத்துவப் பயிற்சிகள், மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படுவதில்லை. மாறாக, மருத்துவர்களே தேவைப்படாத வாழ்வியலைக் கற்றுத் தருவதற்காக நடத்தப்படுகின்றன.
மேற்கண்ட புரிதல்களுடன் பயிற்சிக்கு வாருங்கள்.
செம்மை வனத்தின் அமைவிடம்: 
திருச்சி – தஞ்சை சாலையில் செங்கிப்பட்டி எனும் சிற்றூர் உள்ளது. அங்கிருந்து தச்சன் குறிச்சி செல்லும் வழியில் பாரத எரிவாயு நிறுவனம் (bharath gas plant) செல்ல வேண்டும். பாரத எரிவாயு நிறுவனத்தைக் கடந்த பின்னர்ச் சாலை முடிந்துவிடும். அதில் சிறிது தூரம் சென்றால், செம்மை வனம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் வழிகாட்டிப் பலகை இருக்கும்.
செம்மை வனம் ஆச்சாம்பட்டி எனும் ஊரில் உள்ளது. ஆனால், ஆச்சாம்பட்டி ஊர் இருக்கும் பகுதியும் செம்மைவனம் இருக்கும் பகுதியும் வேறு வேறு. பலர், ஆச்சாம்படிக்குச் செல்லும் வழியை உசாவி ஊருக்குள் சென்றுவிடுகிறார்கள். ஆகவே, செங்கிப்பட்டியில் இருந்து பாரத எரிவாயு செல்லும் வழி எது எனக் கேட்டு அதன்வழி வர வேண்டும். ஆச்சாம்பட்டி செல்லும் வழி எது எனக் கேட்க வேண்டா.
செம்மை வனம் இருப்பது காட்டுப் பகுதி. வாகனப் போக்குவரத்து இல்லை. தனி வாகனம் இல்லாதோர், செங்கிப்பட்டியிலிருந்து மிதியூர்தி (auto) எடுத்து வரலாம்.
மிதியூர்தி ஓட்டுநர் திரு.தட்சிணா மூர்த்தியின் தொடர்பு எண்: 99432 26540.
நான்கைந்து பேர்களாக இணைந்து மிதியூர்திக் கட்டணத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.