சென்னை, பெரம்பூரில், 1 உரூபாய்க் கட்டணத்தில்
கணிணிக் கல்வி!
பெரம்பூரில், ஒரே ஓர் உரூபாய்க் கட்டணத்தில் ஏழை எளியோருக்குக் கணிணிக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பூர் இலட்சுமி அம்மன் கோயில் தெருவில் இராமானுச அறக்கட்டளை இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மாணவ, மாணவியருக்கான கணிணிச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கணிணிக் கல்வி, சடகோபன் இராமானுசதாசரால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக முதுநிலை அறிவியல் (M.Sc) படிப்பில் தங்கம் வென்ற சத்தியா உள்ளார். இவர் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்காக 1 உரூபாய்க் கல்விக் கட்டணத்தில், கணிணி
வகுப்புகள் நடத்தி வருகிறார். இந்த மையம் ௧௩ (13) ஆண்டுகளாக இயங்கி
வருகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் முதல்
வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவரும் பயன்பெற்று வருகின்றனர். மேலும்,
தற்பொழுது இராமானுசரின் ௧௦௦௦ (1,000)-ஆவது பிறந்தநாளை ஒட்டி ௧௦௦௦ (1,000)
மாணவ, மாணவிகளை இதே 1 உரூபாய்க் கட்டணத்தில் சேர்த்துக் கொண்டு கணிணிப் பயிற்சி அளிக்க இம்மையம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
இந்த மையத்தில் பெண்களே மிகுதியாகப்
பங்கு பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். மேலும், இங்கு பயிற்சி பெறும்
பெண்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பினையும் இவர்கள் ஏற்படுத்தித்
தருகின்றனர்.
செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம்,
பெரம்பூர், குளத்தூர் முதலான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்தப்
பயிற்சி மையத்தில் கணிணி பயின்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக