தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்
- தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.
- இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.
- பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார்.
- நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார்.
இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை இயற்றினர். - பழைய உரை ஒன்றும் சொல்லதிகாரத்திற்கு உள்ளது.
- பழங்காலத்தில் தோன்றிய உரைகள் இவையே ஆகும்.
- பழைய உரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இயல்பு உள்ளது.
- இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தும் உரை என்னலாம்.
- சேனாவரையர் உரை வடமொழி இலக்கணக் கொள்கையைத் தமிழின்மீது
திணிக்கும் உரை என்பது பொருந்தும். - பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நிரம்பிய உரையாக உள்ளது.
- நச்சினார்க்கினியர் உரை இலக்கியச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது.
- தெய்வச்சிலையார் உரையில் சில இடங்களில் புதுமை ஒளி காணப்படுகின்றது.
- கல்லாடர் உரை முன்னைய உரைகளைத் தழுவி எழுதப்பட்ட சார்பு உரையாக உள்ளது.
- பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் தொல்காப்பிய ஆராய்ச்சி
தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்தவர் சிவஞான முனிவர்.
தொல்காப்பியப் பாயிரம், முதற் சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் விருத்தியுரை
எழுதினார் இவர். இவ்விருத்தியுரை இலக்கண ஆராய்ச்சிக் கருவூலமாய்த்
திகழ்கின்றது. - இவரை அடுத்துச் சோழவந்தான் அரசன் சண்முகனார்
தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற் சூத்திரத்திற்கும் விருத்தியுரை
எழுதினார். அரசன் சண்முகனார் எழுத்ததிகாரத்தில் நூன் மரபு, மொழி மரபு
என்ற இரு பகுதிகளுக்கும் உரை எழுதினார் என்றும், அவ்வுரைப் பகுதிகள்
கிடைக்கவில்லை என்றும் கூறுவர் [தொல்காப்பியச் செல்வம் (1965) பக்கம் 113].
மு. வை. அரவிந்தன்: உரையாசிரியர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக