பம்புளி என மருவிய பைம்பொழில்
மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி
வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள்
செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று
தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர்
தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த
திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின்
நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு
இன்புற்ற பண்டைத் தமிழர் அதற்குப் பைம்பொழில் என்று பெயரிட்டார்கள்.
அவ்வழகிய பெயர் இக்காலத்தில் பம்புளி என மருவி வழங்குகின்றது.
– ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேதுப்பிள்ளை:
தமிழகம் ஊரும் பேரும்
தரவு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக